மட்டு மாவட்ட செயலகத்தில் சமுர்த்தி மீளாய்வுக் கூட்டம்.......

 மட்டு மாவட்ட செயலகத்தில் சமுர்த்தி மீளாய்வுக் கூட்டம்.......



மட்டக்களப்பு மாவட்ட செயலக சமுர்த்தி திணைக்களத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் அவர்களின் தலைமையில் (02) அன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அசாதாரன சூழ்நிலை காரணமாக சில மாதங்கள் தடைப்பட்டிருந்த முன்னேற்ற மீளாய்வு கூட்டமானது (02)ம் திகதி நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு 14 பிரதேச செயலகங்களில் இருந்தும் சமுர்த்தி தலைமையக முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

2022ம் ஆண்டில் நடைபெற்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. இதன் போது தற்போது சமுர்த்தி வங்கியூடாக வழங்கப்படும் முதியோர் கொடுப்பணவு, சமுர்த்தி கொடுப்பணவு, காத்திருப்போர் கொடுப்பணவுகளை துரிதமாக வழங்க எவ்வாறு செயற்படுவது பற்றி கலந்துரையாடப்பட்டது. மற்றும் 2022ல் சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட சௌபாக்கியா வீட்டுத்திட்டம் பற்றிய முன்னேற்றமும் ஆராயப்பட்டது. மற்றும் பசுமையான தேசம் வீட்டுத்தோட்ட முன்னேற்றம் அதன் தொடச்சியான செயற்பாடுகள் பற்றிய முன்னேற்றமும் ஆராயப்பட்டது.

மற்றும் மாணவர்களுக்கான சிப்தொற புலமை பரிசில் தொடர்பாக ஆராயப்பட்டு எந்த வறிய மாணவரும் தவறாமல் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என பணிப்பாளர் தெரிவித்தார். அத்துடன் சமூக பாதுகாப்பு கொடுப்பணவுகளை மிக விரைவாக மக்களுக்கு சென்றடைய கூடியவாறு செயற்படுமாறும் தெரிவிக்கப்பட்டது.

மற்றும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களை 2023ல் புதுப்பித்தல் தொடர்பாகவும், சமுதாய அடிப்படை அமைப்புக்களின் ஊடாக வாழ்வாதார கருத்திட்டங்களுக்கான முன்மொழிவுகளை வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டது.

 இவ்முன்னேற்ற மீளாய்வு கூட்டத்திற்கு மாவட்ட சமுர்த்தி பிரிவுக்கான கணக்காளர் எம்.எஸ்.பஸீர், சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர் ஜே.எப்.மனோகிதராஜ், சமுர்த்தி வங்கி பிரிவுக்கு பொறுப்பான முகாமையாளர் நிர்மலாதேவி கிரிதராஜ், கருத்திட்ட பிரிவுக்கான முகாமையாளர் ஏ.எம்.அலி அக்பர், கணக்காய்வு பிரிவுக்கான முகாமையாளர் இ.முரளிதரன், சமுர்த்தி நிவாரன பிரிவுக்கு பொறுப்பான முகாமையாளர் அன்னமலர் பிரபு, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பொறுப்பான முகாமையாளர் எஸ்.பிரதீபன், சமுதாய அடிப்படை அமைப்பிற்கு பொறுப்பான முகாமையாளர் எஸ்பகீரதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.






Comments