மட்டு.கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைக்கிடையிலான விளையாட்டு போட்டி.....

 மட்டு.கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைக்கிடையிலான விளையாட்டு போட்டி.....

மட்டக்களப்பு கல்வி வலய அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் 100 நாள் செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைக்கிடையிலான விளையாட்டு சுற்றுப்போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு கல்வி வலய உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.லவக்குமாரின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையிலும் மட்டக்களப்பு பாலமீன் மடு விக்னேஸ்வரா வித்தியாலய உடற்கல்வி ஆசிரியர் செல்வி.கே லதா மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் எஸ்.விஜிகரன் ஆகியோரின் ஒழுங்கமைப்பில் பாடசாலை அதிபர் சி.எஸ்.மகேந்திரன் தலைமையில் இரண்டு நாள் கரம் சுற்றுப்போட்டிகள் மட்டக்களப்பு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் நடைபெறுகின்றது.

100 நாள் செயற்திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் 360 மாணவர்களை கொண்ட 51 மாணவ குழுக்களில் 12,14,16,19 ஆகிய வயதுடைய ஆண் பெண் மாணவர்கள் கலந்துகொண்டு போட்டிகளில் பங்குபற்றியுள்ளனர் .

இன்றைய ஆரம்ப நிகழ்வில் பிரதம ஆதியாக வலயக்கலவி அலுவலக பிரதி கல்விப்பணிப்பாளர் எஸ்.ரவிராஜ், கௌரவ அதிகளாக ஒய்வு நிலை அதிபர் கே.தம்பிராஜா,கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஆர்.கலைவேந்தன், வர்த்தகர் என்.ரகுநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மட்டக்களப்பு பாலமீன் மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இரண்டு நாள் நடைபெறுகின்ற கரம் சுற்றுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் நாளை நடைபெறுகின்ற இறுதிநாள் நிகழ்வின் பின் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது





Comments