கிழக்கு மாகாண நுண்கலை இளம் கலைஞர் விருது மட்டக்களப்பைச் சேர்ந்த முரளிதரனுக்கு வழங்கிவைப்பு!!

 கிழக்கு மாகாண நுண்கலை இளம் கலைஞர் விருது மட்டக்களப்பைச் சேர்ந்த முரளிதரனுக்கு வழங்கிவைப்பு!!



கிழக்கு மாகாண பண்டாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த  2020 மற்றும் 2021 ஆம் ஆண்டிற்கான கலைஞர்களை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. 

இதன் போது சிற்பக்கலையில் காத்திரமான பங்களிப்பை வழங்கியமைக்காகவும், பல்வேறு சாதனைகள் புரிந்தமைக்காகவும் மட்டக்களப்பைச் சேர்ந்த பரமசிவம் முரளிதரன் என்பவர்  2021 ஆம் ஆண்டிற்கான நுண்கலை இளங்கலைஞர் (சிற்பம்) எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 

இவர் 1999 ஆம் ஆண்டு சிற்பத்துறையில் தேசிய ரீதியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றிருப்பதுடன் நுண்கலை படைப்புகள் தொடர்பாக பல்வேறு விருதுகளும், கௌரவங்களும் பெற்றிருக்கிறார்.

மரம், மெழுகு மற்றும் சீமெந்து சிற்பங்களில் ஈடுபாடுடைய இவர் மட்டக்களப்பு நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களான சாரண மாணவர் சிற்பம், வண.வில்லியம் ஓல்ட் அடிகளாரின் சிற்பம் உட்பட பல்வேறு சிற்பங்களை படைத்துள்ளார்.

அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் உயர் பதவியில் இருந்தாலும், கலைத்துறையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் ஓவியம், இலக்கியம் மற்றும் சினிமா ஆகிய துறையிலும் தனது பங்களிப்பை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Comments