அப்பியாச கொப்பிகள் மீதான செஸ் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - கல்வியமைச்சர்............
செஸ் வரியால் புத்தகங்கள் மற்றும் பாடசாலைப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும் இது தொடர்பில் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மேலும் அப்பியாச கொப்பிகள் மீதான செஸ் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 70% பாடசாலை சீருடைகள் சீனாவினால் வழங்கப்படுவதாகவும், முதல் இருப்பு டிசம்பர் மூன்றாவது வாரத்தில் நாட்டிற்கு வரும் எனவும் கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் மார்ச் மாதம் பாடசாலை சீருடைகள் விநியோகிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a Comment