பங்களாதேஸ் அணிக்கான வெற்றியுடன் அரையிறுதிக்கு தகுதியான இந்தியா....

 பங்களாதேஸ் அணிக்கான வெற்றியுடன் அரையிறுதிக்கு தகுதியான இந்தியா....

பங்களாதேஸ் அணிக்கு எதிரான போட்டியில் த்ரில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்தது இந்திய அணி. T/20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் (02) போட்டியில் இந்திய அணியும், பங்களாதேஸ் அணியும் மோதின. அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாட களம் நுழைந்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக விராட் கோலி 64 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுக்க, கே.எல் ராகுல் 50 ஓட்டங்களும் பெற்றுக் கொடுத்தார்.

இதனையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்த களமிறங்கிய பங்களாதேஸ் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான லிட்டன் தாஸ் அதிரடியான துவக்கம் கொடுத்தார். மற்றொரு துவக்க வீரரான நஜிமுல் ஹீசைன்ன் 21 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்தாலும், இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்த லிட்டன் தாஸ் 27 பந்துகளில் 60 ஓட்டங்களை எடுத்த போது கே.எல் ராகுலின் துல்லியமான களத்தடுப்பால் விக்கெட்டை இழந்தார். போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் பங்களாதேஸ் அணிக்கு 4 ஓவர் குறைக்கப்பட்டு வெற்றி இலக்கும் 151 ஆக குறைக்கப்பட்டது. பங்களாதேஸ் அணியின் விக்கெட் கீப்பரான நுரூல் ஹசனின் அதிரடி ஆட்டத்தின் மூலம் வங்கதேச அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவரில் 31 ஓட்டங்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. 

போட்டியின் 15வது ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா அந்த ஓவரில் 11 ஓட்டங்களை விட்டுகொடுத்ததன் மூலம், கடைசி ஓவரில் 20 ஓட்டங்கள் பங்களாதேஸ் அணிக்கு தேவைப்பட்டது. கடைசி ஓவரை வீசிய அர்ஸ்தீப் சிங் அந்த ஓவரில் 14 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தால் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அர்ஸ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டை கைப்பற்றினர்.

பங்களாதேஸ் அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் நடப்பு தொடரில் தனது 3வது வெற்றியை பதிவு செய்துள்ள இந்திய அணி தனது அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்தது.






Comments