மட்டு.வின்சென்ட் பாடசாலை மாணவிகள் கௌரவிப்பு ...........
தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட தமிழ்த்தின போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு (08) அன்று மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையில் நடைபெற்றது. 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய மட்டத்தில் பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட தமிழ்த்தின போட்டியில் கலந்து கொண்ட மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை மாணவிகளின் இலக்கிய நாடகம் போட்டியில் முதலாம் இடத்தினையும், பிரிவு ஐந்து தனி நடனம் போட்டியில் இரண்டாம் இடத்தினையும், விவாத போட்டியில் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்ட மாணவிகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு (08) அன்று மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையின் மண்டபத்தில் நடைபெற்றது.
கல்வி வலயத்திற்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்த்த மாணவிகளை கௌரவிக்கும் வகையில் மட்டக்களப்பு நகர் காந்தி பூங்கா முன்றலில் இருந்து பிரதான வீதி ஊடாக பாடசாலை மாணவிகளினால் பேண்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களினால் ஊர்வலமாக பாடசாலையின் பிரதான மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு மாணவிகளுக்கான கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் உ.தவதிருமகள் தலைமையில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களின் இணைந்த ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் வலயக்கல்விப்பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார், வலயக்கல்வி அலுவலக பிரதி கல்விப்பணிப்பாளர் எஸ்.ரவிராஜ், கல்லூரி ஆசிரியர்கள், மாணவிகள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பாடசாலை பழைய மாணவர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
Comments
Post a Comment