விபுலானந்தா கல்வி நிலைய ஸ்தாபகர் ஈஸ்வரன் இறையடி சேர்ந்தார்.....

 விபுலானந்தா கல்வி நிலைய ஸ்தாபகர் ஈஸ்வரன் இறையடி சேர்ந்தார்..... 

மட்டக்களப்பு விபுலானந்தா கல்வி நிலையத்தை பயனியர் வீதியில் ஸ்தாபித்து அதன் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமன்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் பல பட்டதாரிகள் உருவாக காரண கர்த்தாவாக இருந்த பெருமதிப்புக்குரிய  ஈஸ்வரன்  அவர்கள் (17) அன்று இறைபதம் அடைந்தார். 

அன்னார், மட்டக்களப்பு தனியார் கல்வி நிலைய உரிமையாளர் சங்கத்தின் தலைவராகவும், ஓர் ஆசிரியராகவும் இருந்து பல, கல்வி மற்றும் சமூக பணிகளை ஆற்றியவர் ஆவார். 

குறிப்பாக, மாணாக்கர்களை எமது கலைகளில் ஒன்றான நாட்டுகூத்தின் மீது காதல் கொள்ளவைத்தவர். நீண்டகாலம் உயர்தர வகுப்புக்களுக்கு கற்பித்து பலரை பல்கலைக்கழக படிகளை ஏற வைத்தவர். 

எடுத்த எக் காரியத்தையும் திறம்பட நடாத்தும் ஆற்றல் கொண்டவர் இவரது மகத்தான சேவைகள் என்றும் மறக்கப்படாத நினைவாக இருக்கும் என்பது திண்ணம்.


Comments