வாகரை பிரதேச செயலக புலமைபரிசில் கருத்தரங்கில் கலந்து கொண்ட மட்டு சமுர்த்தி பணிப்பாளர்...
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்கள் வாகரை பிரதேச செயலகத்திற்கு (30) அன்று கள விஜயத்தினை மேற் கொண்டு, சமுர்த்தி பயனுகரிகளை நேரடியாக சந்தித்து கலந்துரையாடியதுடன் சமுர்த்தி திணைக்களத்தால் நடாத்தப்பட்டு வருகின்ற 5ம்தர புலமை பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் முன்னோடி கருத்தரங்கில் கலந்து கொண்டு கருத்ததுரை வழங்கி இருந்தார்.
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்கள் வாகரை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மாங்கேணி மற்றும் கதிரவெளி சமுர்த்தி வங்கிகளுக்கு விஜயத்தினை மேற்கொண்டு வங்கி நடவடிக்கைகளை கண்கானித்ததுடன், வங்கிக்கு தம் சேவை நிமித்தம் வருகை தந்த பொது மக்களிடம் வங்கி சேவை பற்றி கலந்துரையாடினார்.
இதன் பின் சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக நாடுபூராவும் சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்து நடாத்தபடும் 5ம் தர புலமை பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முன்னோடி பரீட்சையும், கருத்தரங்கிலும் கலந்து கொண்டு இம்மாணவர்களுக்கான அறிவுரையையும் பரீட்சைக்கான ஆயத்தம் பற்றியும் கலந்துரையாடினார்.
இதன் போது மாவட்ட பணிப்பாளருடன் மாவட்ட சிரேஸ்ட சமுர்த்தி முகாமையாளா J.F.மனோகிதராஜ் அவர்களும், மாவட்ட வங்கி பிரிவின் முகாமையாளர் நிர்மலாதேவி கிரிதராஜ் அவர்களும் கள விஜயத்தில் இனைந்து கொண்டதுடன். இந்நிகழ்வில் வாகரை பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment