பட்டிப்பளை பிரதேச செயலக சமுர்த்தி பிரிவால் தரம் 5 மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு........
பட்டிப்பளை பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்திப் பிரிவினால் 2022ம் ஆண்டு 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவ, மாணவிகளை பரீட்சைக்கு தயார் செய்து கொள்ளும் பொருட்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் நிதியொதுக்கீட்டின் மூலம் இலவச கல்விக்கருத்தரங்கு செயலமர்வு பட்டிப்பளை பிரதேச செயலாளர் தட்சனகௌரி தினேஸ் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் (20)ம் திகதி நடைபெற்றது.
சமுர்த்தி தலைமையக முகாமையாளர் வரதராஜன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் தியாகராஜா அவர்களும் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், பட்டிப்பளை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பிரதான வளவாளராக T.வசீகரன் அவர்களால் கலந்து கொண்டு செயலமர்வினைச் சிறப்பாக நடத்தி வைத்தார்.
Comments
Post a Comment