கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்திப்பிரிவின் ஏற்பாட்டில் தரம் 5 மாணவர்களுக்கான இலவசக்கல்விக்கருத்தரங்கு.......
கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்திப்பிரிவின் ஏற்பாட்டில் தரம் 5 மாணவர்களுக்கான இலவசக்கல்விக்கருத்தரங்கு.......
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்திப் பிரிவினால் 2022ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவ, மாணவிகளைத் பரீட்சைக்கு தயார் செய்து கொள்ளும் பொருட்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் நிதியொதுக்கீட்டின் மூலம் இலவச கல்விக்கருத்தரங்கும், உளவளத்துணை ஆற்றுப்படுத்தல் செயலமர்வும் பிரதேச செயலாளர் வீ.தவராஜா மற்றும் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம். ஐ.ஏ.அஸீஸ் ஆகியோர்களின் ஆலோசனை வழிகாட்டலில் 2022/11/20ம் திகதி ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எஸ்.ஏ.எம்.பஷீர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திற்கான ஆரம்ப உதவிக்கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.எம்.ஜாபிர் கரீம், ஆசிரிய ஆலோசகர் எம்.பி.நபீர், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் என்.விஜிதன், ஓட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலய உதவி அதிபர் ஏ.எல்.அமீர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.கே.எம்.சர்ஜூன், எம்.பி.எம்.அப்பாஸ், எம்.எல்.சியாத், ஏ.எல்.எம்.நியாஸ், எம்.யூ.எஸ்.ஜெஸீமா, அபிவிருத்தி உத்தியோகத்தர். திருமதி தர்சினி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பிரதான வளவாளராக தேசாபிமானி எம்.எம்.எம்.அஸீஸ், எம்.எல்.எம்.அமீன் மற்றும் எம் பி.எம்.சித்தீக் ஆகியோர் கலந்து கொண்டு செயலமர்வினைச் சிறப்பாக நடத்தினர்.
குறித்த செயலமர்வினை சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.என்.எம்.சாஜஹான் நெறிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment