நெதர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி...........
உலகக்கோப்பைத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் (02) சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் சிம்பாப்வே அணியும் நெதர்லாந்து அணியும் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் மோதியிருந்தன. இந்தப் போட்டியில் நெதர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
முதலில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய சிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் உட்பட அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக ராசா 24 பந்துகளில் 40 ஓட்டங்களை (3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்) பெற்று ஓட்டத்தை உயர்த்தியிருந்தார். சீன் வில்லியம்ஸ் 23 பந்துகளில் 28 ஓட்டங்கள் (3 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்திருந்தார். இறுதியில் 19.2 ஓவர்களில் சிம்பாப்வே அணி 117 ரன்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது. அதிகபட்சமாக நெதர்லாந்து அணியின் வான் மேக்கரென் 03 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ப்ரெண்டண் கிளவர், வீக், பாஸ் டி லீட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும், கிளாஸன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்.
118 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது நெதர்லாந்து அணி. மேக்ஸ் ஓ டவுட் 47 பந்துகளில் 52 ஓட்டங்கள் பெற்று (8 பவுண்டரிகள், 1 சிக்ஸர்) முசரபானி பந்தில் ஆட்டம் இழந்தார். டாம் கூப்பர் 29 பந்துகளில் 32 ஓட்டங்களை பெற்று (2 பவுண்டரிகள், 1 சிக்ஸர்) எல் ஜாங்வே பந்தில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களிலேயே ஆட்டமிழந்தனர்.
18வது ஓவரின் இறுதிப்பந்தில் பாஸ் டீ லீட் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். இறுதியில் 05 விக்கெட் இழப்பிற்கு 120 ஓட்டங்களை பெற்று, ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நெதர்லாந்து அணி. சிம்பாப்வே அணியின் முசரபானி மற்றும் ரிச்சர்ட் தலா இரண்டு விக்கெட்டுகளும், ஜாங்குவே ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
Comments
Post a Comment