வின்சன்ற் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில் 44 மாணவர்களுக்கு 9A சித்தி!!

வின்சன்ற் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில் 44 மாணவர்களுக்கு 9A சித்தி!!

கடந்த 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில், மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையை சேர்ந்த 44 மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதாக, அப்பாடசாலை அதிபர் தவத்திருமகள் உதயகுமார் தெரிவித்தார்.
இதேவேளை, 19 மாணவர்கள் 8A, 11 மாணவர்கள் 7A, 15 மாணவர்கள் 6A சித்திகளையும் பெற்றுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் கடந்த 25ஆம் திகதி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Comments