க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர்.......
கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கான வாய்ப்பிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார்.
செயன்முறைப் பரீட்சை நிறைவடைந்துள்ளமையினால் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் பெறுபேறுகளை வெளியிட முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
2021 ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண பரீட்சை கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்தப் பரீட்சையில் ஐந்து இலட்சத்து 17 ஆயிரத்து 486 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment