மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான மேய்ப்புப்பணிச்சபை மகாநாடு மட்டக்களப்பில் நடைபெற்றது......

 மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான மேய்ப்புப்பணிச்சபை மகாநாடு மட்டக்களப்பில்  நடைபெற்றது......



மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் மறை மாவட்ட மேய்ப்புப்பணிச்சபையின் மகாநாடு மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் கிளெனி மேய்ப்புப்பனிச்சபை நிலையத்தில் மறை மாவட்ட ஆயரும் மேய்ப்புப்பணிச் சபை தலைவருமான கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டைகை தலைமையில் நடைபெற்றது.

திருத்தந்தையினால் 2022 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை 'ஜூபிலி ஆண்டை நோக்கிய பயணத்தில் நம்பிக்கையின் பயணிகள்' எனும் ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டு அதனை இலங்கை கத்தோலிக்க ஆயர்களின் மன்றத்தினால் மறை மாவட்ட ரீதியாக நடைமுறைப்படுத்த மறை மாவட்ட ஆயரினால் அறிவிக்கப்பட்டு அதனை நடைமுறைபடுத்துவது தொடர்பாக  கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை இலங்கை ஆயரவை பேரவையின் கோரிக்கைகைக்கு அமைய, 2022 ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு விழாவை ஆடம்பரம் எதுவும் இன்றி எளிய நிலையில் நிகழ்காலத்துக்கு பொருத்தமாக கொண்டப்பட்ட வேண்டும் என, மறை மாவட்ட ஆயரும் மேய்ப்புப்பணிச் சபை தலைவருமான கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகையினால் விடுக்கப்பட்ட செய்தியினை தொடர்ந்து மகாநாட்டில் கலந்து கொண்ட கத்தோலிக்க பங்கு மேய்ப்புப்பனிச் சபையினரால் கடந்த கால செயல் திட்டத்தின் மீளாய்வுகளும் எதிர்கால ஓராண்டு திட்டங்கள் தொடர்பாகவும் மறை மாவட்டத்திலும் பணித்தளங்களிலும் 'ஜூபிலி ஆண்டை நோக்கிய பயணத்தில் நம்பிக்கையின் பயணிகள்' செயல்பாட்டினை செயல்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இடம்பெற்ற கலந்துரையாடலின் போது 'ஜூபிலி ஆண்டை நோக்கிய பயணத்தில் நம்பிக்கையின் பயணிகள்' ஆண்டில் பங்கு மக்களினால் நாளாந்த வாழ்வை இறை அனுபவத்துடன் அன்புடனும் நோக்குவதனுடாகவும் அதைனை பிறருடன் பகிந்து கொள்வதனுடன் இறை அன்பினை ஆழப்படுத்தலாம் எனவும் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டது.

மட்டக்களப்பு மறை மாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழுவின் இயக்குனர் அருட்பணி இன்னாசி ஜோசெப் அடிகளாரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான மறை மாவட்ட மேய்ப்புப்பனிச் சபை மகாநாட்டு நிகழ்வில் 'ஜூபிலி ஆண்டை நோக்கிய பயணத்தில் நம்பிக்கையின் பயணிகள்' விசேட உரையின் வளவாளராக வடமாகாண அமலமரி தியாகிகள் சபையின் துறவியும் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி பிரதி அதிபருமான லெபோன் சுதன் அடிகளார் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினார்

நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் அனைத்து கத்தோலிக்க பங்கு மேய்ப்புப்பனிச் சபைகளின் உறுப்பினர்கள், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், அப்போஸ்தலிக்க சபை உறுப்பினர்கள், பங்கு பக்தி சபையினர் மற்றும் பொது நிலையினர் கலந்துகொண்டனர்.





Comments