2020 அரச அதிபர் கிண்ணத்தை சுவீகரித்த மட்டக்களப்பு மாவட்ட செயலக அணி......
2022ம் ஆண்டுக்கான மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபருக்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட செயலக கிரிக்கெட் அணி வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது. இதே வேளை பெண்களுக்கான எல்லே போட்டியில் வாகரை பிரதேச செயலகம் முதலாமிடத்தினையும் மட்டக்களப்பு மாவட்ட செயலக பெண்கள் எல்லே அணி இரண்டாமிடத்தையும் பெற்றுக் கொண்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச சேவையில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கான 2022ம் ஆண்டுக்கான அரச அதிபர் வெற்றிக்கிண்ணத்திற்கான போட்டிகள் 22ம் திகதி தொடக்கம் மட்டக்களப்பில் உள்ள பல்வேறு மைதானங்களில் நடைபெற்றன. ஆண்களுக்கான கிரிக்கெட் மற்றும் பெண்களுக்கான எல்லே போட்டிகள் மாவட்ட செயலகம் உட்பட 14 பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
ஆண்களுக்கான கிரிக்கெட் இறுதிப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் கிரான் பிரதேச செயலகமும் மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய கிரான் அணி 10 ஓவர்கள் முடிவில் 62 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 63 ஓட்டங்களை வெற்றி இலக்காக துடுப்பெடுத்தாடிய மாவட்ட செயலக அணி ஸ்ரீநாத் அவர்களின் சிறந்த துடுப்பாட்டத்தால் வெற்றி இலக்கை அடைந்து> 2022ம் ஆண்டுக்கான மட்டு மாவட்ட அரச அதிபர் வெற்றி கிண்ணத்தை சுவீகரித்தது. இப்போட்டிக்கு மாவட்ட செயலக அணிக்கு தலைவராக புஸ்பராஜா கடமையாற்றி இருந்தார். மாவட்ட செயலக அணிக்கு பல விருதுகள் இங்கு வழங்கப்பட்டன ஆட்டநாயகனாக ஸ்ரீநாத் அவர்களும்> சிறந்த தொடர் ஆட்டக்காரராக ஜெகன் அவர்களும்> சிறந்த பந்து வீச்சாளராக பாகீம் அவர்களுக்கும் விருதை பெற்றுக் கொண்டனர்.
Comments
Post a Comment