வெபர் அடிகளாரும் மட்டக்களப்பும் (06)...............

 வெபர் அடிகளாரும் மட்டக்களப்பும் (06)...............



அன்று அவரிடம் கூடைபந்தாட்டம், மெய்வல்லுனர் போட்டிகளில்  பயிற்சி பெற்ற பல மட்டக்களப்பு வீரர்கள் தேசிய மட்டத்தில் சாதனை படைத்து திகழ்ந்தனர். இதன் வரப்பிரசாதத்தால் அவர்களில் பலருக்கு வங்கிகள், அரச தினைக்களங்கள், தனியார் கம்பனிகள் போன்றவற்றில் பல வேலைவாய்ப்புக்கள் கிடைத்தன. அவர்கள் இன்றும் அப்பணியங்களில் பணியாற்றி வருகின்றார் என்றால் அது பாதர் வெபர் அவர்களின் வாழ்க்கையில் ஓர் கடவுள் என்றே அவர்கள் இன்றும் கூறுகின்றனர்.  

இருந்த போதிலும் அவரின் இறுதி நாட்கள் அவருக்கு பாரிய பிரச்சனை கொடுத்துக் கொண்டே இருந்தது. முன்னைய நாட்களில் அவர் உரிய நேரத்தில் உணவுகளை உண்ணாமல் இருந்தமையால் அது அவரின் இறுதி காலத்தில் பசியின்மை நோயாக மாறி பாரிய பிரச்சனையாக காணப்பட்டது. இதனால்  உடல் நிலை படிப்படியாக சோர்வடையத் தொடங்கியது. சிறு நோய் வந்தாலும் ஒரு போதும் வைத்தியசாலை பக்கமே செல்லாத இவர், ஒரு தடவை குறிப்பிட்டிருந்தார் தன் கடைசி காலத்தில் தன்னை வைத்தியசாலையில் வைத்து வைத்தியம் செய்ய வேண்டாம் என குறிப்பிட்டு இருந்தார். இருந்த போதிலும் வைத்தியர்களின் கண்டிப்பான அறிவுறுத்தலின் படி வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பலரும் பலவாறு இவருக்காக தங்கள் தங்கள் இறைவனிடம் இவர் உயிர் வாழ வேண்டும் என பிரார்த்தனை செய்த வண்ணம் இருந்தனர்.

ஆனால்  இவர்களின் வேண்டுதலுக்கு இறைவன் செவிசாய்க்கவில்லை,  வைத்தியசாலையில் 1998.04.19 அன்று காலையில் அனுமதிக்கப்பட்டு, அவரின் விருப்பம் போலே அன்றைய தினமே இரவு 8.30 மணியளவில் தனது 84வது வயதில் இவ்வுலகை விட்டு அந்த உன்னதமான அன்பின் உயிர் பிரிந்து மேலுலகில் சங்கமம் ஆனது.

பாதர் வெபர் அவர்கள் இறந்த செய்து பரவத்தொடங்கியதும்  மட்டக்களப்பு நகரம் எங்கும் ஓரே சோகமயமாக காணப்பட்டது, நகரமே ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. அருட்தந்தையின் பூதவுடல் இரண்டு நாட்களாக புனித மிக்கல் கல்லூரியில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போது, பெருந்திரளான மக்களும், பாடசாலை மாணவர்கள், விளையாட்டு கழகங்கள், பாரளுமன்ற உறுப்பினர்கள், அரச நிர்வாகிகள், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், மதப்பெரியார் போன்றோர் தம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டே இருந்தனர். மட்டக்களப்பில் இப்படி ஒரு மக்கள் கூட்டத்தை கண்டதே இல்லை என கூறும் ஆளவிற்கு மக்கள் இன, மத, பேதமின்றி பாதருக்கு இறுதி மரியாதையை செலுத்திய வண்ணம் இருந்தனர். இறுதியாக ஆராதனைக்காக மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்திற்கு பாதர் அவர்களின் பூதவுடல் கொண்டு வரப்பட்டது அங்கு 35 அருட்தந்தையர்களின் கூட்டு திருப்பலி ஆராதனை  நடாத்தப்பட்டடு, இறுதி ஊர்வலமானது ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு நகரத்தை சுற்றி வந்து வெபர் மைதானத்தை வந்தடைந்தது, சில நிமிடங்கள் அங்கு வைக்கப்பட்டு மீண்டும் புனித மிக்கல் கல்லூரிக்கு  கொண்டு வரப்பட்டு மக்களின் விருப்பத்தின் படி பாடசாலை வளாகத்தின் முன்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.


அவரின் விருப்பபடியே அவரின் பூதவுடல் மட்டக்களப்பில் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் அவரின் ஈர்ப்பால் கவர்ந்தவர்கள் இன்றும் புனித மிக்கல் கல்லூரியில் இது தான் பாதரின் ஸ்ரூடியோ, இது தான் பாதரின் அறை என கூறிக் கொண்டு இன்றும் அவரை தேடுகின்றார்கள். ஆனால் அவர் புனித மிக்கல் கல்லூரியின் வாயிலில் அமர்ந்து இருந்த படி ஒவ்வொரு மாணவனையும் தினமும் பார்க்கின்றார், இது யாருக்கும் தெரியாது. இந்த உயர்ந்த மனிதன் மட்டக்களப்பில் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்திருக்கின்றேன் என பெருமையுடன் கூறிக் கொள்கின்றேன்.

முடிந்தது முடிந்ததே.......

கட்டுரையை தேடி தொகுத்து வரைந்தவர் - பாலசிங்கம் ஜெயதாசன்.




Comments