வெபர் அடிகளாரும் மட்டக்களப்பும் (05) ...............

 வெபர் அடிகளாரும் மட்டக்களப்பும் (05) ...............


இன்னுமொரு தன்னடக்கத்தின் விடயம் தான் இது, பாதர் வெபர் அடிகளார் தனக்கே பாங்கான ஓர் ஸ்கூட்டரை அவர் வந்த காலத்தில் இருந்து இறுதி காலம் வரை வைத்திருந்தார். அந்த ஸ்கூட்டர் அங்கு வரும் போதே மாணவர்கள் சொல்வார்களாம் பாதர் வாரார் என்று, இது மாணவர்களுக்கு மாத்திரமல்ல பெரும்பாலும் மட்டக்களப்பில் இவரை தெரிந்த எல்லோருக்கும் தெரியுமாம் பாதர் வாரார் என்று, அப்படி ஓர் ஆடம்பரம் இல்லாமல் அந்த ஸ்கூட்டரையே இறுதி காலம் வரை உபயோகித்து வாழ்ந்த ஓர் உன்னத மனிதன் தான் அவர். இது மாத்திரமன்றி இவரின் மேலான ஓர் பாங்கு என்ன வென்றால் ஒரு தடவையேனும் அவர் தன் வெள்ளுடையை (Cassock) தவிர்த்து வெளியில் யாரும் இவரை காண முடியாதாம். என்னதான் சிக்கல், என்ன தான் பிரச்சனை என்றாலும் எவ்வளவு அவசரம் என்றாலும் தன் வெள்ளை உடையை (Cassock) அணிந்து கொண்டு தான் வெளியில் வருவாராம். இது அவரின் இறை பணியின் ஒரு குறிக் கோளாகவும் அவர் கடைப்பிடித்து வந்திருந்தார். குருத்துவத்திற்கு உரிய மரியாதை கொடுத்த மகத்தானவர்.

  முக்கியமான ஓரு விடயத்தை இங்க குறிப்பிட வேண்டும் வெபர் அடிகளார் புனித மிக்கல் கல்லூரிக்கு வந்த போது இயேசு சபை குருக்கள்  தங்குவதற்காக புனித மிக்கல் கல்லூரி மறு புரத்தில் உள்ள மேல் மாடி கட்டிடத்தில் ஓர் அறை ஒதுக்கப்பட்டு அவருக்கு கொடுக்கப்பட்டது. அன்று தொடக்கம் அவர் இறக்கும் வரை அந்த அறையை ஓர் அறிவுப்பெட்டகமாகவே வைத்திருந்தார். நானும்  சில நாட்கள் அங்கு சென்றிருக்கின்றேன். இந்த அறையை எல்லோரும் வெபர் ஸ்ரூடியோ என்றே அழைப்பர், இதற்கான காரணம் அக்காலகட்டத்தில் தொலைக்காட்சி யுகம் தொடங்கி காலம், வீடுகளில் தொலைகாட்சி பொட்டிகள் இல்லாத சிறுவர்கள் படங்களை பார்க்க அலைந்து திரிவார்கள், இவர்களை அழைத்து தன் தனது அறையில் வைக்கப்பட்டிருந்த தொலைகாட்சி பெட்டியில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டு போட்டிகள், உலக விடயங்கள், புதுமையான பல செய்திகள், உலக சாதனைகள் என தான் சேகரித்து வைத்திருக்கும் கெசட்டுக்களின் மூலம் வீடியோவில் காண்பித்து மகிழ்ச்சியடைக் கூடிய ஓர் பாங்கான மனிதர் தான் அவர். கல்வி மாத்திரமன்றி விளையாட்டு, ஆன்மிகம் போன்றவற்றை தொலைகாட்சி வாயிலாக கற்பித்தார். இதற்காக தன் வெளிநாட்டு நண்பர்களிடமும், உறவினர்களிடம் வீடியோ கெசட்டுக்ளை சேகரித்து சிறார்களுக்காகவும், மாணவர்களுக்காகவும் அயாரது இறுதி வரை செய்து கொண்டே இருந்தார். இதை பார்ப்பதற்காக மாணவர்களும், சிறார்களும் வெபர் ஸ்ரூடியோவில் தினமும் அலை மோதுவர் இதில் நானும் அலைமோதி இருக்கின்றேன்.

தாம் இலங்கையை 1947ல் இலங்கையை முத்தமிட்ட வெபர் அடிகளார் இரண்டு தடவைகள் தம் சொந்த நாட்டிற்கு தொண்டையில் ஏற்பட்ட புற்றுநோய்க்கான சிகிச்சைக்கு சென்ற போதும் தங்கு தங்கவில்லை, இலங்கைக்கே வந்து விட்டார். அக்காலத்தில் வெபர் மைதானத்தில் விளையாட்டு போட்டிகளுக்கு நடுவராக வரும் உடற்கல்வி ஆசிரியர்கள் வெயிலுக்கு குடை பிடித்து நிற்கும் போது, அங்கே பாதர் வருகின்றார் என்றால் உடனேயே குடையை மறைப்பார்களாம் காரணம் பாதர் சொல்வாராம் உடற்கல்வி ஆசிரியாராய் வந்த உனக்கு வெயில் பெரிய விடயம் இல்லை குடையை எறிந்து விட்டு விளையாட்டு போட்டிகளுக்கு நடுவராக பணியாற்று என்பாராம். 

 தான் இறந்த பின் தன் உடலை வெபர் மைதானத்தில் தான் புதைக்க வேண்டும் அப்போது தான் என் வீர, வீராங்களைகள் என் மேல் ஓடி விளையாடுவார்கள் எனவும் தெரிவித்தாக அறியப்படுகின்றது இதிலிருந்து அவர் விளையாட்டை தன் உயிர் போல் நேசித்து இருந்ததை எம்மால் அவதானிக்க முடிகின்றது.

பாதர் இறுதி நிலைக்கு தன்னை அர்பனித்து வாழ்ந்து வந்தார் அப்போது தான் இடி போன்ற ஒரு செய்தி நம் காதுகளில் எட்டியது இது என்னவென்று அடுத்த தொடரில் பார்ப்போம்......

தொடரும்.......

 



Comments