மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் எதிர்வரும் 04 திகதி நடைபெறவுள்ளது..............

 மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் எதிர்வரும் 04 திகதி நடைபெறவுள்ளது..............



மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மிக நீண்ட காலத்தின் பின் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே.கருணாகரன் அவர்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 04.11.2022 திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட கொவிட் 19 சூழல் மற்றும் நாட்டில் ஏற்பட்ட அரசியல் ஸ்தீரத்தன்மை காரணமாக நீண்ட காலமாக  மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெறாமலிருந்து வந்த நிலையில் கடந்த 2022 மாசி மாதத்திற்கு பின்னர் எதிர்வரும் (04) திகதி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், உணவுப் பாதுகாப்பு குறித்த கிராமப் பொருளாதார மறுமலர்ச்சி தேசிய வேலைத் திட்டம், மட்டக்களப்பு மாவட்டத்தின் உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு மற்றும் புதிய திட்ட முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் அளித்தல் (2022) போன்ற மேலும் பல விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments