வெபர் அடிகளாரும் மட்டக்களப்பும் (03)...............

வெபர் அடிகளாரும் மட்டக்களப்பும் (03)...............



டெனிஸ் விளையாட்டு திடலை மாற்றியதுடன் இன்னுமொரு பிரச்சனை அவ்விடத்திற்கு வந்தது அதை மிகவும் நுனுக்கமாக கையாண்டார் அவர், அந்த பிரச்சனை என்னவென்றால் அவ்விடத்தில் இறந்தவர்களின் உடலங்களை அடக்கம் செய்யப்பட்டிருந்தது. எனவே அவற்றை அகற்றினால் தான் அவ்விடத்தில் மைதானத்தை அமைக்க முடியும். இவ்விடம் ஓர் உன்னதமான இடமாக அவருக்கு தென்பட்டது போல இருந்தது. அவர் நினைத்து இருந்தால் சர்வ சாதாரணமாக அவற்றை அகற்றி விட்டு தம் பணிகளை தொடங்கி இருக்கலாம், ஆனால் அதை செய்ய அவர் அணிந்திருந்த வெள்ளை நிற உடை அனுமதிக்கவில்லை பொருமை காத்தார் பல தடவை சிந்து விட்டு, அவர் இறந்தவர்களின் உடலங்களை அவ்விடத்தில் அடக்கம் செய்தவர்களை தனித்தனியாக சந்திப்பதற்கு முடிவெடுத்தார். ஒவ்வொருவரின் வீட்டு படி ஏறி அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் சம்மதத்துடன் அனுமதியை பெற்று அக்காணியில் ஓர் மைதனத்தை அமைக்க வழிகளை தேடிக் கொண்டே இருந்தார்.

நாட்கள் சென்று கொண்டிருக்க பல விடயங்களை சிந்தித்தார் காணியை எடுத்து விட்டோம் இனி பணிகளை தொடங்க வேண்டும், என தினம் தினம் சிந்தித்துக் கொண்டே இருந்தார். இக்காணியானது சதுப்பு நிலமாகவும், கறடு முறடான நிலப்பிரதேசமாகவும் காணப்பட்டது. இதை சமப்படுத்தினால் தான் இது மைதானமாக அமையும் என சிந்தித்தார். அக்கால கட்டத்தில் பாரிய வேலைகள் செய்யக் கூடிய தற்போதைய JCP வசதிகள் அன்று காணப்படவில்லை, இதை எப்படி செய்யலாம் என சிந்தித்து பலரிடமும் உதவி கோரினார். இறுதியாக அவருக்கு ஓர் செய்தி எட்டியது அது தான் அன்றைய 1960ம் ஆண்டு காலத்தில் கல்லோயா அணைக்கட்டு வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. இப்பணிகளை செய்து கொண்டிருக்கும் மோரிசன் நுட்சன் பொறியாளர்களை சென்று சந்தித்து கலந்துரையாடினார். அவர்களின் சம்மதத்துடன்  வார இறுதி நாட்களில் அம்பாறையில் இருந்து அவர்களது ஜே.சி.பி இந்திரங்களை மட்டக்களப்பிற்கு கொண்டு வந்து வடிகால் வசதியை ஏற்படுத்த முயற்சித்தார் அதிலும் வெற்றி கண்டார். சுமார் ஒன்பது ஏக்கர் காணியை, ஏறக்குறைய ஒன்பது அடிக்கு மணல் இட்டு உயர்தினார். இப்பணிகள் அனைத்தும் இவரின் மனம் போல் அனைவராலும் இலவசமாக செய்து கொடுக்கப்பட்டது என்றால் அது அருட்தந்தையின் பேச்சு செயற்திறன் என்றே சொல்லலாம். அது மாத்திரமன்றி தான் எடுத்த பணியை செய்து முடிக்க வேண்டும் என்கின்ற அவரின் விடா முயற்சியும் ஓர் காரணமாகும் சில ஆண்டுகளில் அவரின் இலட்சிய கனவான மைதான பணிகள் முடிந்தது. 

இதில் முக்கியமாக ஓர் விடயத்தை குறிப்பிட்டே ஆக வேண்டும் இம்மைதான பணிகள் தொடங்கிய நாட்களில் இருந்து ஒவ்வொரு நாளும் காலை, மாலை என முழு நேரமும் மைதானத்தில் செலவு செய்து தம் இரு கைளாலும் மைதானத்தில் காணப்பட்ட கற்கள் மற்றும் முட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.  மைதான பணிகள் செய்து முடிக்கப்பட்டதும், மைதானத்திற்கு பெயர் சூட்டப்பட வேண்டும் என பலரும் பல பெயர்களை முன் மொழிந்தனர். இருந்த போதிலும் மக்கள் ஓர்  வேண்டு கோள் வைத்தனர் மைதானத்திற்கு வெபர் அடிகளாரின் பெயரைத்தான் வைக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தனர். ஏன் என்றால் மட்டக்களப்பு மக்கள் இவர் மீது அளவற்ற பாசம் கொண்டிருந்தனர் தங்கள் பிள்ளைகளை ஓர் திறமையான பிள்ளைகளாக உருவாக்கியதே இதன் வெளிப்பாடாகும். இதற்கு அமைய இம்மைதானத்திற்கு பாதர் வெபர் அவர்களின் பெயரை வைக்க முடிவெடுத்தனர். இதன் நிமித்தம் வெபர் மைதானம் என அன்றே பெயரை சூட்டிவிட்டனர். இப்பெயரே இன்றும் மட்டக்களப்பின் ஓர் உன்னத அடையாள பெயராகவே காணப்படுகின்றது. இம்மைதானம் தற்காலத்தில்  புனருத்தாரனம் செய்யப்பட்ட போதிலும் மங்காத பெயராக காட்சி தருகின்றது. இதில் ஒரு விடயத்தை நான் குறிப்பிட்டே ஆக வேண்டும் அருட்தந்தை அவர்களின் இறுதி சடங்களில் அவரது உடலத்திற்கு முதலில் இடப்பட்ட மாலை இம்மைதானத்தை பிற்பகல் வேளைகளில் இவருடன் இருந்து இம்மைதானத்தை தயார்படுத்திய மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்களால் இடப்பட்டது என்றால் அது மிகையாகாது. இருந்த போதிலும் ஓர் துக்கமான செய்தி மக்கள் காதில் வந்து விழுந்தது அது என்னவென்று அடுத்த தொடரில் பார்ப்போம்...

தொடரும்.....



Comments