வெபர் அடிகளாரும் மட்டக்களப்பும் (02)...............

  வெபர் அடிகளாரும் மட்டக்களப்பும் (02)...............



பணிக்காக கல்லூரியை வந்தடைந்ததும் புனித மிக்கல் கல்லூரியில் ஆரம்ப காலத்தில் சமய நிகழ்ச்சியை மேற்பார்வை செய்யும் பணியில் அவர் ஈடுபட்டார். இதன் பின் ஒவ்வொரு மாணவர்களையும் தனித்தனியாக சந்தித்து அவர்களுடைய பிரச்சனைகளை இனம் கண்டு உளவள ஆலோசகராக செயற்பட்டு அவர்கள் பிரச்சனைகளை தீர்க்க முற்பட்டார். தமிழை கற்றுக் கொள்ள பல முயற்சிகளிலும் ஈடுபட்டு குறுகிய காலத்தில் தமிழை கற்று கொண்டு 1950களில்  கன்னியஸ்திரிகளுக்கான சோமஸ் கல்லூரியில் 6ம் வகுப்பு தொடக்கம் தமிழ், உயர்நிலை வரலாறு, இறையியல் பாடங்களை கற்பித்ததார். இறைபணிக்காக அழைக்கப்பட்டவர் மட்டக்களப்பில் உள்ள இயேசுசபை திருத்தளங்களில் திருப்பலிகளையும் ஒப்புக் கொடுத்து தம் இறைபணியை ஆற்றிக் கொண்டிருந்தார். தன் குரலில் ஓர் வசீகரத்தை வைத்துள்ள இவர் உரத்த குரலில் கதைப்பதையும் வளமாக கொண்டவராக அவர் செயல்பட்டதால் அவருக்கு ஒலி பெருக்கிகள் அப்போது தேவைப்படவில்லை என்றே கூறலாம். இயேசு சபைக்கே உரித்தான உளவளத்துறையில் தேர்ச்சி பெற்ற இவர்,  புனித மிக்கல் கல்லூரியில் தன் பணியில் ஒரு மாற்றத்துடன் செயற்பட முனைந்தார் அந்த மாற்றம் தான் விளையாட்டாக  இருந்தது.  ஆனால் அவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரனாக முன்யை காலங்களில் அவர் நிரூபித்துக் காட்டியது இல்லை, மாறாக அவரிடம் தேடல் இருந்தது. இதனால் விளையாட்டு தொடர்பான நுட்பங்களை தொலைக்காட்சி ஊடாக தேடிக் கண்டு கொண்டதுடன், விளையாட்டை கூர்ந்து கவனிக்கும் பாங்கும் அவருக்கு விளையாட்டின் மீது ஆர்வமும் ஏற்பட்டது. மட்டக்களப்பில் புனித மிக்கல் கல்லூரியை ஓர் விளையாட்டின் பாடசாலையாக உருவாக்க வேண்டும் என்கின்ற எண்ணம் அவரிடம் மேலோங்கி காணப்பட்டது. இதனால் புனித மிக்கல் கல்லூரியில் விளையாட்டை ஆரம்பித்து பயிற்சிகளைத் தொடங்கினார். குறிப்பாக நீளம் பாய்தல், உயரம் பாய்தல், ஈட்டி எறிதல், கோலூண்றி பாய்தல், அஞ்சல் ஓட்ட படிமுறைகள் அத்துடன் கூடைபந்தாட்டத்தில் தம் திறமையை வெளிக்கொணர்ந்து மாணவர்களை பயிற்றுவித்தார். ஓர் சில ஆண்டுகளில் அவரே ஓர் சிறந்த பயிற்றுவிப்பாளராக தம்மை நிலை நிறுத்திக் கொண்டார்.


காலம் நகர நகர இவரின் பாசறையில் வளர்ந்து வந்த புனித மிக்கல் கல்லூரியின் சிறார்கள் கொழும்பில் முதலிடத்தை பெற்று மட்டக்களப்பின் சாதனை படைக்க தொடங்கினர். காலை தொடக்கம் மாலை வரை மைதாத்திலேயே சுற்றிதிரியும் இவர், தான் புனித மிக்கல் கல்லூரிக்கு மாத்திரம் சொந்தமில்லை மட்டக்களப்பு மண்ணுக்கே சொந்தம் என்பது போது பல பாடசாலைகளில் இருந்து வரும் ஆணகள் மற்றும் பெண்களுக்கான விளையாட்டு பயிற்சி வழங்கத் தொடங்கினார். இதனால் இவரின் பயிற்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சாதனை படைத்த  மாணவர்கள் தேசிய மட்டத்தில் சாதனை படைத்த போது இவருக்கான கௌரவம் உயர்தர விளையாட்டு பயிற்றுவிப்பாளராக மாற்றமடைந்தது.

காலம் நகர நகர எனது மாணாக்கர்களுக்கு ஓர் மைதானம் இல்லையே எனும் எண்ண கவலை இவரிடம் மேலோங்கியே இருந்தது. பல பாடசாலைகளை ஒன்றினைத்து ஓர் பொதுவான மைதானத்தை அமைப்பது பற்றி சிந்திக்க தொடங்கினார். அப்போது நகரை சூழ உள்ள இடத்தில் புனித மிக்கல் கல்லூரி, சிசிலியா பெண்கள் பாடசாலை, மெதடிஸ்த மத்திய கல்லூரி மற்றும் வின்சன்ட பாடசாலை காணப்படுவதால் ஒல்லாந்தர் கட்டிய மட்டக்களப்பு கோட்டைக்கு அன்மித்ததாக ஓர் காணி கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணினார். பலரிடம் தன் கோரிக்கையை முன் வைத்தார். அப்போது அவரால் ஓர் சதுப்பு நிலம் கண்டு பிடிக்கப்பட்டது. இப்பிரதேசத்தில் சாதாரணமாக ஒரு மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்கி நிற்கும் ஓர் இடமாகவே அது காணப்பட்டதுடன், அவ்விடத்தில் ஓர் டெனிஸ் விளையாடும் தளமும் அப்போது காணப்பட்டது. அதனை டெனிஸ் விளையாடுவோரின் சம்மதத்துடன் அவ்விடத்தில் இருந்து அகற்றியதுடன், இன்னுமொரு சிக்கலும் அவருக்கு அவ்விடத்தில் ஏற்பட்டது அது என்னவென்றால்?   அது பற்றி அடுத்த தொடரில் பார்ப்போம்...

தொடரும்......

 


Comments