வெபர் அடிகளாரும் மட்டக்களப்பும் (01)...............

 வெபர் அடிகளாரும் மட்டக்களப்பும் (01)...............

மட்டக்களப்பு எனும் போது எம் கண்முன்னே வருவது கல்லடி பாலம், பாடும் மீன்கள், சுவாமி விபுலானந்தர் தான் ஆனால், மட்டக்களப்பு எனும் பெயரை  கூறும் போது இன்னும் இரண்டு விடயங்களை வெற்றியுடன் செய்து காட்டியவர் தான் பாதர் வெபர் அடிகளார் என்றால் அது தான் உண்மை. பாதர் வெபர் அடிகளார் அவர்கள் செய்த சாதனைகளில் ஒன்று புனித மிக்கல் கல்லூரியின் கூடைபந்தாட்ட அணி மற்றையது, தன் முயற்சியால் கொண்டு வரப்பட்ட வெபர் விளையாட்டு மைதனம்  இந்த உன்னத பணி செய்த வெபர் அடிகளாருக்கு 04.11.2022 அன்று வெபர் மைதானத்தில் உருவச்சிலை நிர்மானிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அந்த உயரிய மனிதனுக்கு சிலை எடுக்க உழைத்த அனைத்துள்ளங்களுக்கும் நன்றிகள் உரித்தாகட்டும். 

வெபர் அடிகளாருக்கு உருவச்சிலை நிர்மானிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட இந்த ஓர் இரு தினங்களில் மட்டக்களப்பு நகரில் வெபர் அடிகளாரின் பெயர் தான் பரவலாக பேசப்படுகின்றது. எனவே அவர் தொடர்பான ஒரு கட்டுரையை வெளியிடுவது சிறப்பாக இருக்கும் என எண்ணியே இதை வெளியிடுகின்றேன். ஏல்லாம் சேகரிக்கப்பட்ட தகவல் தான் பிழைகள் இருப்பின் திருத்திக் கொள்வோம். இது ஒரு நீண்ட கட்டுரை பகுதி பகுதியாக தருகின்றேன் நன்றி.......

அன்றும், இன்றும்,என்றும் எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட பெயர் தான் பாதர் வெபர் என்கின்ற நாமம். இந்த நாமம் மட்டக்களப்பில் 1947 ஆண்டு தொடக்கம் இன்று வரை பேசப்பட்டு வரும் ஒரு நாமமாக தான் காணப்படுகின்றது.

யார் இந்த பாதர் வெபர் இவருக்கும் மட்டக்களப்பிற்கும் என்ன தொடர்பு என்று யார் கேட்டாலும் இந்த பாதர் வெபர் என்னும் சொல்லை அறியாதவர்கள் மட்டக்களப்பில் யாரும் இல்லை என்றே கூறலாம், இல்லை இலங்கையிலேயே இவரின் பெயரை அறியாதவர்கள் யாருக்கும் இருக்க மாட்டார்கள் என்றே கூறலாம். ஹரோல்ட் ஜான் வெபர் என்கின்ற தன் தாய் தந்தையர் வைத்த பெயருடன் இயேசுசபை துறவியாக  1947ல் இலங்கை மண்ணை வந்தடைந்தார் வெபர் அடிகளார்.

இவர் 1914ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ம் திகதி அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் நியூ ஆர்லியன்ஸ் நகரில்  பிறந்தார். குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையாக பிறந்த இவருடன் 03 சகோதரர்களும், ஒரு சகோதரியுடனும் வாழ்க்கை நடாத்தி வந்தார். இளம் வயதிலேயே மற்றவருக்கு உதவி செய்யும் மனப்பாங்குடன் வாழ்ந்த இவருக்கு இவரது சகோதராரைப் போன்றே இயேசுசபை துறவியாக வேண்டும் என்கின்ற ஆசை வந்தது. இதன் நிமித்தம் இயேசு சபை துறவியாக இணைந்து கொண்டு சென் லூயிஸில் இணைந்து தத்துவத்தையும், சென் மேரிஸ் கன்சாஸில் இறையியலையும் நிறைவு செய்தார். 1941ல் குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர் தம் பணி இறைவன் தந்த பணி என செவ்வனே செய்து கொண்டு வந்த போது, புளோரிடா மாநிலத்தில் தம்பா எனும் பகுதியில் இயேசு சபை துறவிகளுக்கு உயர் கல்வி கற்பித்துக் கொண்டிருந்தார். அக்கால கட்டத்தில் 1946ல் இவருக்கான ஓர் அழைப்பு இயேசுசபை துறவிகளிடம் இருந்து வந்தது. அது என்னவென்றால் இலங்கையில் சேவையாற்ற வேண்டும் என்கின்ற அழைப்பு தான். இறைவனின் சித்தம் எதுவோ இது நடக்கட்டும் என முடிவெடுத்து, இலங்கை செல்ல விருந்த குழுவில் தம்மையும் இணைத்துக் கொண்டார் அடிகளார்.

1947ல்
அருட்தந்தை மெக்நாயர் மற்றும் ஹீனியுடன் இலங்கைக்கான பயணத்தில்  பாதர் வெபர் அடிகளார் அவர்கள் இணைந்து கொண்டு பயணித்தார். தனது 34 வயதில் இலங்கையை வந்தடைந்தவருக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓர் பாடசாலையில் இணைந்து பணியாற்றும் படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. முற்றிலும் வித்தியாசமான ஓர் இடம் எவ்வாறு இருக்கும் எப்படி இருக்கும் பல கேள்விகளின் மத்தியில்  மட்டக்களப்பை நோக்கி பயணிக்கிறார் பாதர் வெபர் அடிகளார். வரும் போதே அவரிடம் தெரிவிக்கப்படுகின்றது மட்டக்களப்பில் இயேசு சபையின் பாடசாலையான புனித மிக்கல் கல்லூரியில் தான் தாங்கள் பணியாற்றப் போகிறீர்கள் என்று கூறப்பட்டது. இதில் ஓர் விடயத்தை நாம் மிக முக்கியமாக உன்னிப்பாக கவணிக்க வேண்டும் சுமார் 50 வருடங்கள் இப்பாடசாலையில் சேவையாற்றிய இவர் ஒரு போதும் இப்பாடசாலையின் அதிபராகவோ, பிரதி அதிபராகவோ, தலைமை அதிகாரியாகவோ, விளையாட்டு மேலாளராகவோ, சபை தலைவராகவோ, மாணவர்களின் ஆலோசனை முதல்வராகவோ எந்த பெரிய பதவிகளிலும் அவர் இருந்ததே இல்லை வெறுமனனே ஓர் தொண்டாளராகவே தன் கடமையை செய்து முடித்த ஓர் உயர்ந்த மனிதன்........
தொடரும்.....

Comments