Youth Excellence விருதினைப் பெற்றார் மட்டக்களப்பு கவிஞர் கவிதா லலித்குமார்....

Youth Excellence விருதினைப் பெற்றார் மட்டக்களப்பு கவிஞர் கவிதா லலித்குமார்....


“Times Womens” அனுசரணையில் “Women Icon” நிறுவனத்தினால் வழங்கப்படும் “Youth Excellence” விருதை கடந்த (16) அன்று தமிழ்நாட்டின் திருச்சியில் Women Icon நிறுவனத்தின் தலைவர் S.Abuthahir A.அபுதாஹிர் அவர்களிடமிருந்து பல்வேறுபட்ட எழுத்தாக்க படைப்புகளில் சிறந்து விளங்கும் மட்டக்களப்பைச் சேர்ந்த கவிஞர் கவிதா லலித்குமார் பெற்றுக் கொண்டுள்ளார்.
நவீன உலகில் பெண்கள் சாதனை படைக்காத துறைகளே இல்லை எனும் அளவிற்கு எல்லா துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். உலகளாவிய ரீதியில் பல்வேறு பெண்கள் சாதனைப் பெண்களாக திகழ்கின்றனர்.
அவ்வகையில் சர்வதேச நிறுவனமான world women council வருடந்தோறும் பல்வேறுபட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றதும் தனித்துவம் வாய்ந்ததுமான பெண்களுக்குரிய சர்வதேச விருதான women icon விருதை உலகளாவிய ரீதியாக வழங்கி வருகின்றது.
இவ்விருதுக்காக இலக்கியம், சமூக, கலை, கலாசார மற்றும் தலைமைத்துவம் போன்றவற்றில் சிறந்த ஆளுமையுடன் செயற்படுகின்ற முன்மாதிரியான பெண்களுக்கு இவ்விருதுகள் பரிந்துரை செய்யப்பட்டு அதிலிருந்து உரிய தகைமையைப் பெற்றவர்களை சர்வதேச ரீதியாக 15 நாடுகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட துறைசார் சிறப்புத் தேர்ச்சியுடைய நடுவர்களால், தேர்ந்தெடுக்கின்றனர்.
இதற்கமைய 2022 ஆம் வருடத்தின் Youth Excellence விருதினை இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கவிஞர் கவிதா லலித்குமார் பெற்றுக் கொண்டுள்ளார்.
இவர் கடந்த 20 வருட காலமாக கவிதை, சிறுகதை, தொடர்கதை, பாடல்கள் போன்ற இலக்கியம் சார் படைப்புகளை பத்திரிகை, சஞ்சிகை, மின்னிதழ்கள் மற்றும் கவிக்குழுமங்களில் தொடர்ந்து வெளியிட்டுவருவதோடு இவரின் எழுத்தாக்கமானது சமூகம் சார்பானதாகவும் சமூகத்தினை விழிப்புணர்வூட்டும் கருப்பொருள் கொண்டதாகவும் நவீன கால நடைமுறைகள் தொடர்பான தொழில்நுட்ப வளர்ச்சியின் மாறுபட்ட கலாசார விழுமியங்களை பிரதிபலிப்பனவாகவும் மனித வாழ்வியலின் யதார்த்த பண்புகளான காதல், இன்ப துன்ப நிலைகள் உறவுகளிக்கிடையேயான அந்நியோன்னியம் போன்றவற்றை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்துவனவாகவும் அமைந்துள்ளன.
இவரின் பலதரப்பட்ட படைப்புகளில் மிக முக்கியமானதாக எதிர்பார்ப்பு, அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு, உயர்விலும் தாழ்வு, மாற்றம் போன்ற சிறுகதைகளும் காத்திருப்பு, விதிவரைந்த பாதை வழியே, நிழல்கள் நிஜங்களாகும், நேரம் போன்ற தொடர் கதைகளும் பிரியங்களின் பிரதிபலிப்பு, அன்பொன்றே நிரந்தரம், விருந்து, பூமித்தாய் அழுகிறாள், மீண்டெழுவோம், நானும் நீயும், உன் விழிகளால் மொழி பேசி, ஒரு ஆணின் பிரசவம் போன்ற கவிதைகளும் குறிப்பிடத்தக்கவை. இவ்வாறு விருது பெற்ற கவிஞர் கவிதா லலித்குமாருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.




Comments