பாடசாலைகளுக்கிடையிலான T/20 கிரிக்கெட் போட்டி திருகோணமலையில்.............
திருகோணமலை TRINCO BOYS விளையாட்டுக்கழகத்தின் நான்காம் ஆண்டு நிறைவை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட ஆறு பாடசாலைகளுக்கு இடையில் T20 கடினப்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி ஒன்று (wells Cricket Ground)ல் (22) அன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியில் மட்டக்களப்பில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த பாடசாலையான புனித மிக்கல் கல்லூரியும் மோதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இத்தொடரில் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி, திருகோணமலை விவேகானந்தா கல்லூரி, திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா கல்லூரி, திருகோணமலை சிங்கள மத்திய மகா வித்தியாலம், திருகோணமலை விபுலானந்தா கல்லூரி ஆகிய பாடசாலைகளும் மோதவுள்ளது.
Comments
Post a Comment