T20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் உட்பட இந்த 4 அணிகளும் தான் அரையிறுதிக்கு தகுதிபெறும் – ஜாம்பவான் சச்சின்

 T20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் உட்பட இந்த 4 அணிகளும் தான் அரையிறுதிக்கு தகுதிபெறும் – ஜாம்பவான் சச்சின் ....

2022ஆம் ஆண்டுக்கான T20 உலகக்கிண்ண தொடரில் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறும் 4 அணிகள் தொடர்பில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்லும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். T20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். மாறாக இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா அணிகளும் வலுவாக திகழ்கின்றன. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான்  அணி மிகவலுவாக இருக்கும்.

ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் துடுப்பாட்டம், பந்து வீச்சு என அனைத்து வகையிலும் மிரட்டலான அணியாக திகழ்கிறது. டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியில் குயிண்டன் டி காக், டேவிட் மில்லர் ஆகிய அதிரடி வீரர்கள் மிரட்டலாக உள்ளனர். எனவே T20 உலக கோப்பையை வெல்வதற்கான போட்டி அணிகளுக்கு இடையே கடுமையாக இருக்கும்.

இந்நிலையில், T20 உலக கோப்பை குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் ஆருடம் தெரிவித்துவரும் நிலையில், சச்சின் டெண்டுல்கரும் ஆருடம் தெரிவித்துள்ளார். இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறும் என்று ஆருடம் தெரிவித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.




Comments