பேனடிக் ஞாகார்த்த இறுதிப் போட்டி KSV புற்தரையில்......
மட்டக்களப்பில் பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை உயர்த்துவதற்காக மட்டக்களப்பு நியூ ஈஸ்டன் ஸ்டார் அக்கடமி முதல் தடவையாக ஏற்பாடு செய்து நடாத்தும் பெனடிக் ஞாபகார்த்த 15 வயதிற்குட்பட்டோருக்கான கடின பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் புற்தரை மைதானத்தில் 16.10.2022 அன்று நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பில் பாடசாலை கிரிக்கெட்டினை ஊக்குவிப்பதன் மூலமே தேசிய மட்டத்திற்கு வீரர்களை கொண்டு செல்லாம் எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் கிரிக்கெட் அக்கடமிகள் துளிர் விட்டு பிரகாசிக்கத் தொடங்கியுள்ளன. இதற்காக முதல் முதலில் மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட அக்டமி தான் EPP அக்கடமியாகும். இதனை தொடர்ந்து துளிர் விட்ட மற்றுமொரு அக்கடமி தான் நியூ ஈஸ்டன் ஸ்டார் அக்கடமி. இதனை தவிர தற்போது கோல்டன் ஈகில் அக்கடமி என 03 அக்கடமிகள் மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டாலும், சில விளையாட்டு கழகங்கள் தங்கள் யூனியர் அங்கத்தவர்களை கொண்டு கழக மட்டத்தில் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கியுள்ளனர். அந்த வகையில் குறிப்பாக சிவானந்தா விளையாட்டு கழகம், டிஸ்கோ விளையாட்டு கழகம் தங்கள் இளம் வீரர்களை கொண்டு இளம் வளர்ந்து வரும் வீரர்களுக்கான அணிகளை மட்டக்களப்பில் உருவாக்கி வருகின்றனர் இது பாராட்டத்தக்க விடயமாகும்.
இவர்களை இனைத்து பெனடிக் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது நியூ ஈஸ்டன் ஸ்டார் அக்கடமி இப்போட்டியில் ஆரம்ப நிலையிலேயே சிவானந்தா யூனியர் விலகிக் கொள்ள மற்றைய அணிகள் மோதிக் கொண்டன. சுவாரஸ்யமாக நடந்த இத் தொடர் இன்று இறுதி நிலையை எட்டியுள்ளது. இறுதிப் போட்டிக்கு நியூ ஈஸ்டன் ஸ்டார் அக்கடமி அணியும், டிஸ்கோ யூனியர் அணியும் மோதவுள்ளனர் எனும் மகிழ்ச்சியான செய்தியை உங்களுக்கு தெரிவிப்பில் மகிழச்சியடைகின்றோம்.
இது வெறும் போட்டியல்ல மட்டக்களப்பில் இழை மறை காயாக இருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களை கண்டு பிடிப்பதற்கான ஒரு செயற்பாடாகவே இது இருக்கின்றது. மட்டக்களப்பை பொறுத்தவரை எல்லாம் முதலில் சிறப்பாக தொடங்கப்படும் ஆனால் இறுதியில்................... பல உண்டு பிறகு பேசுவோம் முதலில் பெனடிக் ஞாபகார்த்த இறுதிப்போட்டியில் சந்திப்போம்...............
Comments
Post a Comment