KSCயின் முன்னாள் வீரர் ரொசான் கனடா உலக லெஜன்ட் அணிக்காக களம் காண்டார்......
அமெரிக்காவின் புளோரிடாவில் அக்டோபர் 14 முதல் 16 வரை நடைபெற்ற 2022 லெஜெண்ட்ஸ் உலகக் கோப்பை போட்டியில் கனடா லெஜண்ட்ஸ் அணிக்காக ரொஷான் விக்னராஜா களம் கண்டார் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ரொஷான் கொழும்பு புனித பீற்றர் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார், இவர் சிறுவனாக இருந்த போது 1983 இனக்கலவரத்தின் பின்னர் மட்டக்களப்பை வந்தடைந்து, தனது கல்வியை புனித மிக்கல் கல்லூரியிலும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியிலும் கல்வி கற்றார். மிகச்சிறந்த பந்து வீச்சாளரான இவர் முன்னாள் மேற்கிந்திய தீவு வேகப்பந்து வீச்சாளர் மல்கம் மார்சல் சாயலில் பந்து வீசக் கூடியவர். துடுப்பாட்டம் அதிரடி கலந்த ஆட்டமாகவே காணப்பட்டது. சிறு வயதில் மென்பந்து போட்டிகளிலேயே அவரால் அதிகம் விளையாடப்பட்டது. மிக்கல் கல்லூரி, இந்துக்கல்லூரி அணிகளுக்காக தன்னை நிலை நிறுத்திய இவர் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தில் தன் திறமையை வெளிக் கொணர்ந்து பல வெற்றிகளை கோட்டைமுனை விளையாட்டு கழகத்திற்காக பெற்றுக் கொடுத்துள்ளார். அவரின் பந்து வீச்சு பணி ஒரு தனி அழகு தலையில் பாண்ட் அணிந்து கொண்டு அவருடைய ரன்-அப் மற்றவர்களை விட குறைவாக இருக்கும் ஆனால் அந்த நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர்களை விட வேகமாக பந்து வீசியவர். 80களில் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தில் சதானந்தன், வசிகரன், உதயா ராமநாதன், நிமல் காட்பிரே மோசஸ், ரஞ்சன், மேனன், கஜன் இன்னும் சிலருடன் விளையாடும் பாக்கியம் அவருக்கு கிடைத்தது. பின்னர் கனடா பயணமாகிய இவர் 90களில் கனடாவில் மைக்கேல்மென் விளையாட்டு கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி வந்தார்.
ரோஷன் அஜாக்ஸ் கிரிக்கெட் கழகம் உட்பட சில பிரபலமான கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பல போட்டிகளில் விளையாடி வந்தவர். கிரிக்கெட் வீரர்களிடையே மிகவும் அரிதான பேட்டிங் மற்றும் பந்துவீச்சைக் கொண்ட சிறந்த சகல துறை ஆட்டக்காரரான இவர் கனடா அணியை பிரநிதித்துவப்படுத்தி விளையாடியதை மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகம் சார்பாக வாழ்த்துகின்றோம். உலக அளவில் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் பெயரை பறைசாற்றும் எம்மவர்களை பாராட்டுவோம்
Comments
Post a Comment