KSCவீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பிய KSC தலைவர் ராஜா....
இன்று (29) அம்பாந்தோட்டை கிரிக்கெட் அக்கடமியுடன் அம்பாந்தோட்டையில் 50 ஓவர்கள் கடினபந்து கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள சென்றுள்ள S.மயூரதன் தலைமையிலான கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் கிரிக்கெட் அணி வீரர்களை வாழ்த்து தெரிவித்து, மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் அலுவலகத்தில் வைத்து வழியனுப்பி வைத்தார் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் தலைவர் பே.சடாட்சரராஜா அவர்கள்.
நீண்ட நாட்களின் பின் ஒரு நெடுந்தூர பயணத்தை மேற் கொள்ளும் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் கிரிக்கெட் அணிக்கு முகாமையாளராக C.யசோக்குமார் அவர்களும் பயிற்றுவிப்பாளராக G.கிருஸ்ணராஜாஜி அவர்களும் சென்றுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும். இதே வேளை பயிற்றுவிப்பாளர் மற்றும் முகாமையாளருடன் கலந்துரையாடும் போது வீரர்களின் பாதுகாப்பையும், ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்க வழியுறுத்தினார்.
Comments
Post a Comment