ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடைபெற்ற சிறுவர் முதியோர் தின நிகழ்வு......
இன்றைய நாளில் பல இடங்களிலும் சிறுவர் முதியோர் தின நிகழ்வுகள் அரங்கேறிய வன்னமே இருந்தன. பெரும்பாலும் பிரதேச செயலகங்கள் பலவும் இன்றைய இந்த இனிய நாளை விடுமுறை தினம் என்று கூட கருதாமல் பல நிகழ்வுகளை நடாத்தி முடித்திருக்கின்றன.
இதன் அடிப்படையில் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திலும் சிறுவர் தினமும் முதியோர் வாரமும் பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத் அவர்களின் தலைமையில் நடைபெற்றன.
இன்றைய சிறுவர்கள் நாளைய படைப்பாளிகள் நாளைய படைப்பாளிகள் எங்களது முன்னோடிகள் இதுவே இன்றைய சிறுவர் முதியோரை போற்றுதற்குரிய விடயமாகும்.
இந்நிகழ்வில் ஏறாவூர் நகர் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், சமுர்த்தி கருத்திட்ட மகாமையாளர், பிரதேச செயலக சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர், சமூக சேவை உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிரா உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment