மூன்று வீரர்கள் அவுஸ்திரேலியா செல்ல உள்ளனர்.....
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுவரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடிவரும் இலங்கை வீரர்கள் பலர் உபாதையால் அவதிப்படுவதுடன் சிலர் நாடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், மேலும் 3 வீரர்களை இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்கு இலங்கை கிரிக்கெட் தீர்மானித்துள்ளது. அதன்படி, விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான நிரோஷன் டிக்வெல்ல, வேகப்பந்து வீச்சாளர்களான அசித்த பெர்னாண்டோ மற்றும் மதீஷ பத்திரன ஆகியோரை உயர் செயல் திறன் அதிகாரியான டிம் மெக்காஸ்கிலுடன் அவுஸ்திரேலியாவுக்கு பயிற்சிக்கு அனுப்ப இலங்கை கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.
இலங்கை அணியின் முக்கிய 5 வீரர்கள் இம்முறை இடம்பெற்றுவரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் உபாதைக்குள்ளாகியுள்ளனர். டில்ஷான் மதுஷங்க, துஷ்மந்த சமீர, மற்றும் தனிஷ்க குணதிலக்க ஆகியோர் உலகக் கிண்ணப் போட்டியின் போது காயமடைந்த நிலையில் நாடு திரும்பியுள்ளனர். இதேவேளை, பிரமோத் மதுஷான் மற்றும் பெத்தும் நிஸங்க ஆகியோர் சிறு காயங்களுடன் தற்போது அணியில் உள்ளனர்.
இது குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகரான மஹேல ஜெயவர்தன இது குறித்து தெரிவிக்கையில், இலங்கை அணியில் மேலும் சில வீரர்களுக்கு உபாதைகள் ஏற்பட்டால் அவர்களுக்கு மாற்று வீரர்கள் தேவைப்படுவர் என்பதால், இலங்கையில் இருந்து மேலதிக வீரர்களை அழைத்து அவுஸ்திரேலியாவில் தயார் நிலையில் வைத்திருக்க தீர்மானித்துள்ளோம் இது எளிதான விடயம் என்பதால் இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment