சாரதி அனுமதி அட்டைகள் அச்சடிக்கும் பணி ஆரம்பிக்கப்படும்.............
எதிர்வரும் வாரத்திலிருந்து சாரதி அனுமதி அட்டைகள் அச்சடிக்கும் பணி ஆரம்பிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.நாட்டில் ஏற்பட்ட அசாதராண நிலை காரணமாக தடைப்பட்டிருந்த இப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜேர்மனியில் இருந்து அடுத்த வாரம் 5 இலட்சம் அட்டைகள் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நிஷாந்த விரசிங்க தெரிவித்துள்ளார். 06 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட உள்ளதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
நிரந்தர சாரதி அனுமதிப்பத்திரம் வெளிநாடு செல்வோருக்கு மாத்திரம் அட்டைகளில் அச்சிடப்படும் என ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a Comment