சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில்.....
ஏறாவூர் நகர பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இரண்டு முன்பள்ளி பாடசாலைளில் சிறார்களுக்கு சத்துணவு கஞ்சி கோப்பை வழங்கும் நிகழ்வு (17) ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை ஒட்டி சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் முன்பள்ளி சிறார்களின் போசணை தேவைகளை இனங்கண்டு சத்துணவு கஞ்சி கோப்பை வழங்கும் திட்டத்தின் கீழ் ஏறாவூர் 3A சாதுலியா முன்பள்ளி பாடசாலை மற்றும் மிச்நகர் அல் அஷ்ரப் முன்பள்ளி பாடசாலை சிறார்களுக்கு சத்துணவு கஞ்சி இதன் போது வழங்கப்பட்டது.
அத்துடன் சமுர்த்தி சௌபாக்கியா வீடு திட்டத்தின் கீழ் 05 வீடுகள் சமுர்த்தி பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் K.கணேசமூர்த்தி அவர்களும், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் MBM.றுமைஸ் அவர்களும், சமுர்த்தி வங்கி முகாமையாளர் AM.நிகாரா மற்றும் S.குமுதினி அவர்களும், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் ULM.அஸீஸ் அவர்களும், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்குக்கு பொருப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் A.றிபாயா அவர்களும், பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Comments
Post a Comment