அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் பெதும் நிஸ்ஸங்க மற்றும் பிரமோத் மதுசான் விளையாடுவார்களா?
பெதும் நிஸ்ஸங்க மற்றும் பிரமோத் மதுசான் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெறவுள்ள அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடுவது தொடர்பிலான அறிவிப்பொன்றை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் பெதும் நிஸ்ஸங்க உபாதைக்கு முகங்கொடுத்திருந்ததுடன், பிரமோத் மதுசான் நமீபியா அணிக்கு எதிரான போட்டியின் போது தசைப்பிடிப்பு உபாதைக்கு முகங்கொடுத்தார். இவ்வாறான நிலையில் இவர்கள் இருவரும் இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரமோத் மதுசான் மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஆகியோர் தற்போது உபாதையிலிருந்து சிறப்பான முறையில் குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இவர்கள் இருவரின் உடற்தகுதியை போட்டி தினமான நாளை (23) மதிப்பிட்ட பின்னர், அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இவர்கள் விளையாடுவார்களா? இல்லையா? என்பது தொடர்பில் அறிவிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை அணி நாளைய தினம் சுபர் 12 சுற்றின் தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளதுடன், இந்தப்போட்டியானது இலங்கை நேரப்படி காலை 09.30 மணிக்கு ஹோர்பாட்டில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment