இளங்கோவன் மதனன் அவர்களுக்கு "சஹாசக் நிமவும்" தேசிய விருது.....

 இளங்கோவன் மதனன் அவர்களுக்கு "சஹாசக் நிமவும்" தேசிய விருது.....



இலங்கையில் உள்ள புதிய கண்டுபிடிப்பாளர்களை வருடந்தோறும் இலங்கை கண்டு பிடிப்பாளர் சம்மேளனம் கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்று வருகின்றது. இதன் அடிப்படையில் இலங்கையில் பல புதிய கண்டு பிடிப்பாளர்கள் வருடந்தோறும் கண்டு பிடிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டு வருகின்றனர்.



2021ம் ஆண்டிற்கான புதிய கண்டு பிடிப்பாளராக மட்டக்களப்பை சேர்ந்த இளங்கோவன் மதனன் அவர்கள் அவசர எச்சரிக்கை மணி ஒலியை கண்டு பிடித்து "சஹாசக் நிமவும்" தேசிய விருதின் வென்கலப்பதக்கத்தினை (26) அன்று பெற்றுக் கொண்டார்.

இவர் 2019 ஆண்டு 118 மூலகங்களை கொண்ட அவர்த்தன அட்டவனையினை 2.41செக்கன்களில் வரிசை கிரமமாக அடுக்கிசாதனை படைத்திருந்தார் ஆரம்பத்தில் இச்சாதனை 2.49 செக்கன்களில் இருந்ததை இவர் முறியடித்துள்ளார். கிண்ணஸ் சாதனை செய்து இதற்கான விருதினையும் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.






Comments