மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி பிரிவால் நடாத்தப்பட்ட வறுமை ஒழிப்பு தின நிகழ்வுகள் பற்றிய ஒரு கண்ணோட்டம்....

  மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி பிரிவால் நடாத்தப்பட்ட வறுமை ஒழிப்பு தின நிகழ்வுகள் பற்றிய ஒரு கண்ணோட்டம்....

சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் பல்வேறு வேலைத்திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் ஊடாக (17) அன்று முன்னெடுக்கப்பட்டன. முன் பள்ளி சிறார்களுக்கான சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம், ஒரு லட்சம் வேலை வாய்ப்புக்கான ஜப்பான் மொழி பயிற்சி நெறி ஆரம்ப நிகழ்வு,  புதிதாக நிர்மானிக்கப்பட்ட வீடுகள் கையளித்தல் நிகழ்வு, முதியோருக்கான கொடுப்பணவை வீடுகளுக்கே வழங்குவதற்கான வேலைத்திட்டம், சிப்தொற புலமை பரிசில் பெறும் மாணவர்களுக்கான கொடுப்பணவை வழங்கும் வேலைத்திட்டம்  என பல்வேறு வேலைத்திட்டங்கள் பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினரால் இன்றைய தினம் (17) வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. 

அவற்றின் சில தொகுப்புக்கள்....


















Comments