ஐந்து மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் .............

 ஐந்து மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் .............

நாட்டில் நிலவும் அடைமழை காரணமாக ஐந்து மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்  எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி களுத்துறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி, காலி ஆகிய 5 மாவட்டங்களில் இந்த அபாயம் நிலவுவதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

மேற்படி மாவட்டங்களில் வசிப்பவர்கள் மலைகள், சரிவுகள் மற்றும் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட இடங்களில் அவதானமாக இருக்கும்படியும், தங்களை பாதுகாத்துக்கொள்ளக்கூடிய ஆயத்தங்களை முன்னெடுக்கும்படியும் கட்டட ஆராய்ச்சி நிறுவனம் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Comments