இறுதியில் தவற விட்ட அறபா கல்லூரி......
மட்டக்களப்பில் உள்ள பலரின் எதிர்பார்ப்பின் மத்தியில் 17 வ6யதிற்குட்பட்டோருக்கான பாடசாலை மட்ட (Div-III) இறுதிப்போட்டிக்காக கிழக்கு மாகானத்தில் இருந்து முதல் பாடசாலையாக பயணத்தை ஆரம்பித்தது ஏறாவூர் அறபா கல்லூரி. எல்லோர் மனதிலும் நிச்சயம் வெற்றி என்கின்ற தாகத்துடன் புறப்பட்டது.
நாலந்தா கல்லூரி மைதானத்தில் ஆரம்ப பயிற்சிகளை முடித்ததன் பிற்பாடு போட்டிக்கு தயாரானது, முதலில் துடுப்பெடுத்தாடுவதற்காக ஏறாவூர் அறபா கல்லூரியின் அணித்தலைவர் முகமட் பஜீஸ் அவர்களும் ரிபாஸ் அவர்களும் களத்திற்குள் நுழைய ஆட்டம் ஆரம்பமானது. ஆரம்பித்த 1.5 ஓவரில் தன் முதலாவது விக்கெட்டினை 08 ஓட்டங்களுக்கு இழந்தது அறபா கல்லூரி. அணித்தலைவர் 05 ஓட்டங்களுடன் வெளியேற களத்தில் நுழைந்தார் சகீம் இவருடன் இணைந்து ரிபாஸ் அவர்களும் மிகவும் பொறுமையாக துடுப்பெடுத்தாடி 59 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று 67 ஓட்டத்தினை கடக்க முயற்சித்த போது ரிபாஸ் அவர்கள் 30 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து சிகாம் அவர்களும் 15 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க 03 விக்கெட்டினை இழந்து தடுமாறியது அறபா கல்லூரி. இதன் போது களம் நுழைந்த நகையான் மற்றும் அகமட் சபாகி இருவரும் இனைந்து ஓட்ட வேகத்தை உயர்த்தினர் நகையான் தன் அதிரடி துடுப்பாட்டத்தை காட்டி கொண்டிருந்தார். அணியின் எண்ணிக்கை 116ல் இருந்த போது அகமட் சபாகி 14 ஓட்டங்களுக்கு தன் விக்கெட்டினை பறி கொடுத்து வெளியேறினார். சிமா களம் நுழைய நகையான் சிறப்பாக துடுப்பெடுத்தாடுவார் பயப்பட தேவையில்லை என நாம் போது நகையான் அவர்களும் 30 ஓட்டங்களுடன் அணியின் எண்ணிக்கை 120ஆக இருக்கும் போது ஆட்டமிழக்கின்றார். இதனைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாட வந்தவர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க ஏறாவூர் அறபா கல்லூரி 45.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 136 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்து வீச்சில் ராஜசிங்ஹ மத்திய மகாவித்தியாலம் சார்பாக இறுதி நேரத்தில் பந்து வீச அழைக்கப்பட்ட திமுது துஸ்கந்த 18 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும், சந்து மண்டீவ் 22 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும், அணித்தலைவர் பிரவின் மனிசா 23 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி இருந்தனர்.
ராஜசிங்ஹ மத்திய மகாவித்தியாலம் பதிலுக்கு துடுப்பெடுத்தாட அணித்தலைவர் பிரவின் மனிசா மற்றும் தவித்து தேவானித்து களம் நுழைந்தனர் 2.4 ஓவரில் நகையானின் பந்து வீச்சில் தம் முதலாவது விக்கெட்டியை இழந்தது. ராஜசிங்ஹ மத்திய மகாவித்தியாலம் அணித்தலைவர் நிதானத்துடன் துடுப்பெடுத்தாட இரண்டாவது விக்கெட்டும் 27 ஓட்டங்களுக்கு இழந்தது. அணித்தலைவர் தன் நிதானமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய வன்னமே இருந்தார். அணி 58 ஓட்டங்களை பெற்ற போது அணித்தலைவர் பிரவின் மனிசா 35 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டினித்து விதுசாவை ஓட்டமெதுவும் பெறாமல் நகையான் ஆட்டமிழக்க செய்ய ராஜசிங்ஹ மத்திய மகாவித்தியாலம் 04 விக்கெட்டுக்களை இழந்து 77 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது. அப்போது களத்தில் இனைந்து கொண்ட திமுது திருக்கா அவர்களும் சந்து மண்டீவ் சிறந்ததொரு இணைப்பாட்டத்திரனை வழங்கி வெற்றிக்கு வழிவகுத்தனர். இதில் சந்து மண்டீவ் 62 பந்து வீச்சுக்களை எதிர் கொண்டு 42 ஓட்டங்களை ஆட்மிழக்காமல் பெற்றுக் கொள்ள திமுத்து திருக்கா 46 பந்து வீச்சுக்ககை எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 21 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.
இதில் முக்கியமான ஒரு விடயத்தை நாம் உற்று நோக்க வேண்டும் ராஜசிங்ஹ மத்திய மகாவித்தியாலம் சார்பாக சந்து மண்டீவ், பிரவின் மனிசா, திமுத்து திருக்கா ஆகிய 03 வீரர்கள் மாத்திரமே துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். இதன் அடிப்படையில் 17 வயதிற்குட்பட்டோருக்கான பாடசாலை மட்ட (Div-III) இறுதிப்போட்டியில் ஹன்வெல ராஜசிங்ஹ மத்திய மகாவித்தியாலம் 06 விக்கெட்டுக்கால் வெற்றி பெற்று வெற்றிக்கின்னத்தை தனதாக்கி கொண்டது.
முக்கியமாக நாம் பாரட்டப்பட வேண்டியவர்கள் ஏறாவூர் அறபா கல்லூரி மாணவர்கள் மற்றும் தன் முழு இரத்தத்தையும் வியர்வையாக சிந்தி உழைத்த பாடசாலையின் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் முகமட் பாஸில் அவர்களையும், பாடசாலை சமூகம், மற்றும் இதனுடன் சார்ந்த விளையாட்டு கழகங்கள், நலன் விரும்பிகள் எல்லோரையும் இச்சந்தர்பத்தில் கோட்டைமுனை விளையாட்டு கழகம், கோட்டைமுனை விளையாட்டு கிராமம், EPP சார்பாக வாழ்த்துகின்றோம் இது தங்களுக்கு வெற்றியே இது நிச்சயம் மீண்டும் தொடர வேண்டும் வாழ்த்துக்கள்..........
Comments
Post a Comment