வாகனம் வைத்திருப்பவர்களுக்கு அவசர எச்சரிக்கை.................

  வாகனம் வைத்திருப்பவர்களுக்கு அவசர எச்சரிக்கை.................

நாட்டில் கடந்த ஒன்பது மாத காலப் பகுதியில் 1405 வாகன திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.கடந்த 2021ம் ஆண்டில் நாட்டில் மொத்தமாக 1405 வாகன திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதிக எண்ணிக்கையிலான வாகனத் திருட்டுக்கள், மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள் நடைபெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் 976 மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 1116 மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஒன்பது மாதங்களில் 311 முச்சக்கர வண்டிகள் களவாடப்பட்டுள்ளதுடன், கடந்த 2021ம் ஆண்டில் மொத்தமாக 353 முச்சக்கர வண்டிகள் களவாடப்பட்டுளதாக தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் 14 கார்கள் மற்றும் 25 வான்களும் களவாடப்பட்டுள்ளன. வாகன உரிமையாளர்கள் கவனயீனமே இவ்வாறு வாகனத் திருட்டுக்களுக்கான காரணம் என தெரிவித்துள்ளார். வாகனங்களை நிறுத்தும் போது அவதானத்துடன் நிறுத்தி வைக்க வேண்டுமென தெரிவித்துள்ள அவர் வாகனங்கள் தொடர்பாக காவல் துறையினரிடம் தெரிவிக்கப்படும் பெரும்பாலான முறைப்பாடுகள், “திருட்டுகள்” தவிர, “கொள்ளைகள்” அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வாகன உதிரிபாகங்களின் விலை அதிகரித்துள்ளதால் வாகன திருட்டுகள் அதிகரித்துள்ளன. எனவே வாகன உரிமையாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும், அனைவரும், தங்கள் வாகனங்களை எளிதில் திருடுவதை தவிர்க்கும் வழிகளை கையாளுமாறும் பொலிஸ் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்

Comments