காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் முன்பள்ளி சிறார்களுக்கு இலைக்கஞ்சிக் கோப்பை வழங்கும் நிகழ்வு .....

 காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் முன்பள்ளி சிறார்களுக்கு  இலைக்கஞ்சிக் கோப்பை வழங்கும் நிகழ்வு .....


சர்வதேச  வறுமை ஒழிப்பு தினத்தையொட்டி  சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் மேற் கொள்ளப்படும்  முன்பள்ளி சிறார்களின் போசணைத் தேவைகளை இனங்கண்டு  இலைக் கஞ்சிக்  கோப்பை வழங்கும் திட்டத்தின் கீழ் புதிய காத்தான்குடி அல் உமர் முன்பள்ளி பாடசாலை மற்றும்  காத்தான்குடி முதலாம் குறிச்சி ஹுஸைனிய்யா முன்பள்ளி பாடசாலை சிறார்களுக்கு இலைக்கஞ்சி வழங்கும் நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலாளர் யு. உதயஸ்ரீதர் அவர்கள்  ஆரம்பித்து வைத்தார். 

இந்நிகழ்வில் காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர்  எம்.எஸ்.சில்மியா அவர்களும், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ் அவர்களும், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் வாமதேவன் உட்பட சமுர்த்தி திட்ட முகாமையாளர் அவர்களும், வலய சமுர்த்தி முகாமையாளர்கள். சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முன்பள்ளி ஆசிரியைகள்  நிருவாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.











Comments