பஜீஸ் துடுப்பாட்த்திலும், நகையான் பந்துவீச்சாலும் இறுதி போட்டிக்கு தெரிவான அறபா கல்லூரி.....
இலங்கை பாடசாலைகள் (Div-III) 2022ம் ஆண்டிற்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அரையிறுதி போட்டியில் M.N.M.பஜீஸின் சிறந்த துடுப்பாட்டத்திலும் H.S.M.நகையானின் சிறந்த பந்துவீச்சிலும் அறபா கல்லூரி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகி கிழக்கு மாகானத்திலேயே (Div-III) பாடசாலைகள் அணியில் முதல் அணியாக தெரிவு செய்யப்பட்டு வரலாற்றில் தன் பெயரை பதிந்துள்ளது.
(03)ம் திகதி நடைபெற்ற அரையிறுதி போட்டியானது ஏறாவூர் அறபா கல்லூரிக்கும் கம்பொல விக்கிரமபாகு மத்திய கல்லூரிக்கும் இடையில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஏறாவூர் அறபா கல்லூரி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 187 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ஆரம்ப இணைப்பாட்டமாக 118 ஓட்டங்கள் பெறப்பட்டு சிறந்ததொரு ஆட்டத்தை M.N.M.பஜீஸ் அவர்களும் A.R.M.றிபாஸ் அவர்களும் வழங்கிய போதிலும் மற்றைய வீரர்கள் பெரிதாக துடுப்பாட்டத்தை வழங்கவில்லை. துடுப்பாட்டத்தில் M.N.M.பஜீஸ் 58 ஓட்டங்களையும், A.R.M.றிபாஸ் 41 ஓட்டங்களையும், A.N.N.ஷஹாம் 24 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் கம்பொல விக்கிரமபாகு மத்திய கல்லூரி சார்பாக N.M.D.N.நவரெட்ன 31 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும், S.M.G.M.சமரநாயக்க 24 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி இருந்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாட களம் நுழைந்த கம்பொல விக்கிரமபாகு மத்திய கல்லூரி 34.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 118 ஓட்டங்களுக்குள் சுருண்டு கொண்டது. துடுப்பாட்டத்தில் M.மதிஷ சிந்தன 24 ஓட்டங்களையும், H.G.T.D.ஹத்துருசிங்க 21 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் அறபா கல்லூரி சார்பாக H.R.அகமட் அல் நகையான் 20 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களையும், M.J.முகமட் சபாகி 26 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும் கைப்பறி இருந்தனர்.
இந்த அரையிறுதி போட்டியில் 69 ஓட்டங்களால் கம்பொல விக்கிரமபாகு மத்திய கல்லூரியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது ஏறாவூர் அறபா கல்லூரி. இறுதிப்போட்டியயில் வெற்றி பெற நாமும் வாழ்த்துவோம், எதிர்வரும் சனிக்கிழமை (08) திகதி அன்று ஹன்வெல ரணசிங்க மத்திய மகா வித்தியாலத்துடன் கொழும்பு மருதானை நாலந்த கல்லுரியின் மைதானத்தில் நடைபெறும் என்பதை அறிய தருகின்றோம்.
Comments
Post a Comment