மாவட்ட செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் மற்றுமொரு முன்னேற்ற மீளாய்வுகூட்டம் பட்டிப்பளை பிரதேச செயலகத்தில்......
மாவட்ட செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் மற்றுமொரு முன்னேற்ற மீளாய்வுகூட்டம் பட்டிப்பளை பிரதேச செயலகத்தில்......
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி திட்டத்தின் முன்னேற்றத்தை அறிந்து கொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்களின் தலைமையிலான குழுவினர் ஒவ்வொரு பிரதேச செயலகங்களாக சென்று முன்னேற்றங்கள், எதிர்கால திட்டங்கள், தற்போது எதிர் நோக்கும் பிரச்சனைகள், மற்றும் துரிதமாக செயற்படுத்த வேண்டிய பணிகள் பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இதன் முதல் கட்டமாக 30.08.2022 அன்று வாகரை பிரதேச செயலகத்திற்கு சென்று தம் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தை நடாத்தி இருந்தனர்.
இதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் மேற்கு (பட்டிப்பளை) பிரதேச செயலகத்திற்கு (27) அன்று கள விஜயம் மேற் கொண்டு சமுர்த்தி தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தை நடாத்தி இருந்தனர். மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் தட்சனகௌரி தினேஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இம்மீளாய்வு கூட்டத்தில் சமுர்த்தி வங்கி பிரிவு, கருத்திட்ட பிரிவு, கணக்காய்வு பிரிவு, சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் பிரிவு, சமூக பாதுகாப்பு காப்புறுதி பிரிவு, சமுர்த்தி நிவாரன பிரிவு, நிர்வாக பிரிவு போன்றவற்றை பற்றி கலந்துரையாடப்பட்டது.
சமுர்த்தி நிவாரணம் வழங்குதல், காத்திருப்போர் பட்டியலுக்கான கொடுப்பணவு வழங்குதல் மற்றும் முதியோர் கொடுப்பணவுகளை துரிதப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டதுடன் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சார்ந்த பல விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
மாவட்ட செயகத்தில் பணியாற்றும் சமுர்த்தி பிரிவினர் ஒரு குழுவாக பிரதேச செயலகங்களுக்கு சென்று பல முன்னேற்றகரமான செயற்பாடுகளை வெற்றிகரமாக செய்து வருகின்றனர். இதற்கான முன் ஏற்பாடுகளை செய்து வழி நடாத்தி வெற்றியை கண்டுள்ளார் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்கள் என்றால் அது மிகையாகாது.
இந்நிகழ்வில் மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment