ஏறாவூர்பற்று பிரதேச செயலக கலாசார விழாவும், இலக்கிய விழாவும்......

 ஏறாவூர்பற்று பிரதேச செயலக கலாசார விழாவும், இலக்கிய விழாவும்......



ஏறாவூர்பற்று பிரதேச செயலக கலாசார பேரவையும், கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்திய கலாசார விழாவும், இலக்கிய விழாவும் (21) அன்று பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் அவர்களின் தலைமையில் செங்கலடி சௌபாக்கியா மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வின் போது "நானிலம்" நூல் வெளியீடும், 2022ம் ஆண்டிற்கான பிரதேச இலக்கிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பரிசில்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டதோடு, கலைஞர்களுக்கான கௌரவிப்பும் நடைபெற்றது அத்தோடு மாணவர்களின் கலை நிகழ்வுகளும் அரங்கை அலங்கரித்தன.
இந் நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக தமிழ் கற்கைகள் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ரூபி வலன்ரீனா பிரான்சிஸ், மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன், கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட சிரேஷ்ட விரிவுரையாளர் அருட்தந்தை அ.அ.நவரெட்ணம் அடிகளார், உதவிப் பிரதேச செயலாளர்,உதவி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
















Comments