சாதனை படைத்த மாணவன் றிபாத் அல்-இஹ்ஸான் விளையாட்டுக் கழகத்தினால் கெளரவிப்பு..........
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி கல்விக் கோட்டதிற்குட்பட்ட பதுறியா நகர் அல் மினா வித்தியாலயத்தின் பழைய மாணவனும் மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மாணவனும் பதுரியா- மாஞ்சோலை அல் இஹ்ஸான் விளையாட்டுக்கழக வீரருமான றிபாத் மாகாண மட்டத்தில் நீளம் பாய்தல் போட்டியில் மூன்றாமிடத்தினைப் பெற்றதுடன், 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் நான்காமிடத்தினையும் பெற்று தேசிய விளையாட்டுப்போட்டிக்கு தெரிவாகி தான் கற்ற பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்திருந்தார்.
மாணவன் றிபாத் மற்றும் அவருக்குப்பயிற்றுவித்து, ஊக்கமளித்த பயிற்றுவிப்பாளர் மற்றும் ஆசிரியர்களான ஷிபான், றிகாஷ், றினோஸ் ஆகியோரையும் கௌரவிக்கும் நிகழ்வு கழக காரியாலயத்தில் இடம்பெற்றது. விளையாட்டுக் கழகத்தலைவர் அபூபக்கர் றிபாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஏ.எம்.நௌபர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
அத்துடன், சிறப்பதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் எம்.பி.எம்.நபீர், அல்-இஹ்ஸான் விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய ஆலோசகருமான எம்.என்.எம்.ஷாஜகான் (SDO), பதுரியா நகர் சன சமூக நிலையத்தின் செயலாளர் எம்.எஸ்.எம்.இப்றாஹிம் ஆசிரியர், கல்குடா மீடியா போரத்தின் பணிப்பாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் ஆகியோரும் ஏனைய அதிதிகளாக மாஞ்சோலை ஹிழ்றியா ஜும்ஆப் பள்ளிவாயல் தலைவர் என்.சுலைமா லெப்பை, மாஞ்சோலை கிராமிய அபிவிருத்திச்சங்கத் தலைவர் அப்துல் ஹமீது, பதுறியா நகர் கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் ஈஷா றியாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சாதனை படைத்த மாணவர் றிபாத் மற்றும் ஆசிரியர்களும் அதிதிகளால் நினைவுச்சின்னம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர்.
Comments
Post a Comment