சிவானந்தா பாடசாலைக்கு மல்யுத்த போட்டியில் தங்கம்......

 சிவானந்தா பாடசாலைக்கு மல்யுத்த போட்டியில் தங்கம்...... 

அகில இலங்கை ரீதியாக பாடசாலை மட்ட விளையாட்டு போட்டியில் சிவானந்தா பாடசாலைக்கு 20 வயதிற்குட்பட்ட 60-65 கிலோ எடையுள்ள மல்யுத்த போட்டியில் குருகுலசிங்கம் பவிசன் தங்கப்பதகத்தை பெற்றுக் கொடுத்து சாதனை படைத்துள்ளார்.

2022ம் ஆண்டுக்கான பாடசாலை மட்ட தேசிய விளையாட்டு போட்டியானது கம்பஹாவில் நடைபெற்றது. இப்போம்டியில் சிவானந்தா பாடசாலை சார்பில் போட்டியிட்ட 04 வீரர்கள் பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்கள். 20 வயதிற்குட்பட்ட 60-65 கிலோ எடையுள்ள மல்யுத்த போட்டியில் குருகுலசிங்கம் பவிசன் தங்கப்பதகத்தையும், 18 வயதிற்குட்பட்டோருக்கான 54-60 கிலோ எடையுள்ள மல்யுத்த போட்டியில் சஞ்சீவ் டிரோன் வெள்ளி பதக்கததையும், 18 வயதிற்குட்பட்டோருக்கான 48-51 கிலோ எடையுள்ள மல்யுத்த போட்டியில் கிருஸ்ணகுமார் ஹரிபிரசாந் வெள்ளி பதக்கததையும், 16 வயதிற்குட்பட்டோருக்கான 41-44 கிலோ எடையுள்ள மல்யுத்த போட்டியில் ரெல்சன் கிசோர்நாத் வென்கலப் பதக்கததையும் பெற்று பாடசாலைக்கு புகழகளை தேடிக் கொடுத்துள்ளனர். 

இப்போட்டிக்காக இம்மாணவரை பயிற்றுவித்து வெற்றி களம் காண உழைத்திருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மல்யுத்த வீரர்களில் ஒருவரான திருச்செல்வம் அவர்களை சிவானந்தா பாடசாலையும், அதன் சமூகமும், பழைய மாணவர் சங்கமும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

குருகுலசிங்கம் பவிசன்

சஞ்சீவ் டிரோன்
கிருஸ்ணகுமார் ஹரிபிரசாந்
ரெல்சன் கிசோர்நாத்


Comments