சிறுவர் முதியோர் தினத்தை முன்னிட்டு மாஞ்சோலையில் உளவளத்துணை ஆற்றுப்படுத்தல் செயலமர்வு.......
சர்வதேச சிறுவர் தின மற்றும் முதியோர் வாரத்தை முன்னிட்டு மாஞ்சோலை கிராம உத்தியோகத்தர் பிரிவில் உளவளத்துணை ஆற்றுப்படுத்தல் செயலமர்வு (04) சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.எம் நியாஸ் தலைமையில் மாஞ்சோலை அல் இஹ்ஸான் விளையாட்டுக் கழக காரியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் என்.விஜயன், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.என்.எம்.சாஜஹான், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு விடய பொறுப்பு உத்தியோகத்தர் கே.கலாரூபி மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.எம். நூர்டீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பிரதான வளவாளராக மீராவோடை பிரதேச வைத்திய சாலையின் வைத்தியர் Dr.றிஸ்வியா கலந்து கொண்டு விளக்கமளித்தார்.
Comments
Post a Comment