'விளையாடி மகிழ்வோம்' சர்வதேச சிறுவர் தினக் கொண்டாட்ட நிகழ்வு......
மண்முனை தென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் 'விளையாடி மகிழ்வோம்' சர்வதேச சிறுவர் தினக் கொண்டாட்டம் (07)ம் திகதி ஓந்தாச்சிமடம் கடற்கரை பிரதேசத்தில் பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பாடசாலை சிறுவர்களுக்கான புலமைப்பரிசில் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், 100 வயதை பூர்த்தி செய்த களுவாஞ்சிகுடி வடக்கு-01 கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த சங்குபதி தங்கராசா அவர்கள் கௌரவிக்கப்பட்டிருந்ததுடன், சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் சிறுவர்களின் போசாக்கு, ஆரோக்கிய நிலையை மேன்படுத்தல், உளவியல் ரீதியாக அபிவிருத்தி செய்து ஒழுக்க நெறிமிக்க சிறந்த சமூகத்தை உருவாக்குதல், பாலியல் ரீதியான துன்புறுத்தல்களில் இருந்து சிறுவர்களை பாதுகாத்தல் போன்ற விடயங்கள் இங்கு வலியுறுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் புவனேஸ்வரி ஜீவகுமார், சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் K.உதயகுமார், எருவில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் பா.துரைராசசிங்கம், மாங்காடு சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.ஆனந்தமோகன், கல்லாறு சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.ரவிந்திரன், சிறுவர் மேன்பாட்டு உத்தியோகத்தர் கே.கருணாகரன், கிராம சேவை உத்தியோகத்தர் எஸ்.ஞானசிறி, சமூக அபிவிருத்தி உதவியாளர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment