மட்டக்களப்பு நண்பர்களால் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு......
கிரான் பிரதேச செயலாளர் S.ராஜ்பாபு அவர்கள் கேட்டுக் கொண்டதற்கினங்க மட்டக்களப்பில் இருந்து வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் மட்டக்களப்பு நண்பர்களின் உதவியுடனும், மட்டக்களப்பில் வாழும் நண்பர்களின் உதவியுடனும் இவ்வுதவி வழங்கப்பட்டன.
கிரான் பிரதேச செயலாளர் S.ராஜ்பாபு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆண்டு ஒன்று தொடக்கம் 10 வரையான 30 மாணவர்களுக்கும், உயர்தரம் கற்கும் 10 மாணவர்களுக்கும், 08 முன்பள்ளி மாணவர்களுக்கும் இவ்வுதவி வழங்கி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தரவை ஸ்ரீ கலைவாணி வித்தியாலைய அதிபர் சண்முகம் தயாளன் அவர்களும், பெரியவெட்டுவான் கண்ணகி வித்தியாலய அதிபர் T.டினேஸ்வரன் அவர்களும், பேரிலாவெளி கிராம உத்தியோகத்தர் K.ஜெயக்குமார் அவர்களும், கிரான் பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் S.சிவபாதசேகரம் அவர்களும், பேரிலாவெளி சமுர்த்தி உத்தியோகத்தர் S.தயாபரன் அவர்களும் மட்டக்களப்பு நண்பர்கள் சார்பாக தவராஜா சுரேஸ் அவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment