தற்போதைய பொருளாதார நிலை காரணமாக மக்கள் காலடியில் சென்று சேவை செய்யும் சமுர்த்தி வங்கி.....
தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை ஓரளவேனும் தீர்க்கும் முகமாக சமுர்த்தி வங்கிகள் தங்கள் சேவைகளை மக்கள் காலடியில் கொண்டு சேர்க்கும் வண்ணம் நடமாடும் வங்கிச் சேவையை வழங்கி வருகின்றது.
இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென் மேற்கு (பட்டிப்பளை) பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மாவடிமுன்மாரி சமுர்த்தி வங்கியானது மக்களின் போக்குவரத்து சிரமங்களை கருத்தில் கொண்டு நாடமாடும் வங்கிச்சேவையை கெவிலியாமடு, கச்சக்கொடி கிராமங்களில் மக்கள் காலடியிலேயே சேவையை அன்மையில் வழங்கி இருந்தது.
இதன் மூலம் 189 சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பணவு அவர்களின் சொந்த கிராமத்திலேயே வழங்கி வைக்கப்பட்டது. இவ்வங்கிச்சேவையானது மாவடிமுன்மாரி சமுர்த்தி வங்கி முகாமையாளர் K.சந்திரகுமார் அவர்களின் மேற்பார்வையில் உரிய பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்து வங்கி ஊழியர்களின் அயராத பங்களிப்புடன் நடைபெற்றது குறிப்பிடத்தக்க விடமாகும்.
Comments
Post a Comment