அறிகுறி தென்பட்டால் வைத்தியசாலையை நாடுங்கள்..........

அறிகுறி தென்பட்டால் வைத்தியசாலையை நாடுங்கள்.......... 

சிறுவர்கள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு, குழந்தைகள் மத்தியில் இன்புளுவன்சா நோய் அதிகளவில் பரவும் போக்கு காணப்படுவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். மழை காலநிலை மற்றும் குளிர் ஆகியவை இந்நோய் பரவுவதற்கு முக்கிய காரணம் என்றும் கூறியுள்ளார்.

நோய் அறிகுறிகள்:

காய்ச்சல், இருமல், வாந்தி, சளி ஆகியவை இன்புளுவன்சாவின் முக்கிய அறிகுறிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார். இந்த அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகளை பாடசாலைகள் மற்றும் பகல் நேர பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்புவதை பெற்றோர் தவிர்க்குமாறும் வைத்தியர் தீபால் பெரேரா பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக இந்த அறிகுறிகள் குடும்பத்தில் பரவக்கூடும் என்றும், இது தொடர்பில் உடனடியான வைத்திய சிகிச்சையை பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையில், குழந்தைகளிடையே கோவிட் நோய் பரவல் குறைவான மட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Comments