தியாகி அறக்கொடை நிதியத்தினால் ரிதிதென்ன இக்ராஹ் வித்தியாலய மாணவிகளுக்கு சீருடை வழங்கி வைப்பு..........

 தியாகி அறக்கொடை நிதியத்தினால் ரிதிதென்ன இக்ராஹ் வித்தியாலய மாணவிகளுக்கு சீருடை வழங்கி வைப்பு..........



பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட 15 வயதுக்குட்பட்ட பெண் மாணவிகளுக்கான எறிபந்து போட்டியில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவாகிய மட்டக்களப்பு  ரிதிதென்ன இக்ராஹ் வித்தியாலய பாடசாலை மாணவிகளுக்கான  சீருடைகள் வழங்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம். றிஸ்மின் தலைமையில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசத்தில் அமைந்துள்ள இப்பாடசாலையில் கல்வி பயிலும் தமிழ், முஸ்லிம் என ஏராளமான மாணவர்கள் வறிய குடும்பப்பின்னணியை கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். இம்மாணவிகள் தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான சீருடையின்மை  குறித்து இன, மத வேறுபாடுகளுக்கப்பால் நாடளாவிய ரீதியில் பல்வேறு அறப்பணிகளை மேற்கொண்டு வரும் தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவன் தியாகேந்திரனிடம் கல்குடா மீடியா போரத்தின் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க தேசிய மட்ட விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்பதற்கான இச்சீருடை இவர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது, ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நெளபர் உள்ளிட்ட ஆசிரியர்கள் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.









Comments