சமுர்த்தி மாதாந்த மீளாய்வுக் கூட்டம்.........

 சமுர்த்தி மாதாந்த மீளாய்வுக் கூட்டம்.........



சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் சமுர்த்தி சந்தைப்படுத்தல் தொடர்பான கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்களின் தலைமையில் (07) அன்று  மாவட்ட  செயலக மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இவ் மீளாய்வு கூட்டத்திற்கு பிரதேச செயலகங்களில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களுக்கு பொறுப்பான பொருளாதார உத்தியோகத்தர்களும்,  சந்தைப்படுத்தல் பிரிவுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட பொருளாதார உத்தியோகத்தர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன் போது சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் முன்னேற்றம் பற்றி விரிவாக கலந்தரையாடப்பட்டதுடன் சந்தைப்படுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இதன் போது துரித பயிச்செய்கை, மரநடுகை, புதிய கருத்திதிட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

இதன் போது உரையாற்றிய மாவட்ட பணிப்பாளர் அவர்கள்  நீங்கள்  எவ்வாறு  சிறந்த சேவையினை மக்களுக்கு வழங்கலாம்  என சிந்தித்து செயலாற்றுமாறு கூறியதுடன், சமுர்த்தி திட்டத்தின் மிக முக்கியமாக இன்று கருதப்படும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களை வழிநடாத்தும் பொறுப்பும், கண்கானிக்கும் பொறுப்பும் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு செயற்படுமாறும் கூறினார்.

இக் கூட்டத்திற்கு  மாவட்ட  சமுர்த்தி வங்கி பிரிவுக்கான முகாமையாளர் நிர்மலாதேவி கிரிதராஜ் அவர்களும் மாவட்ட சமுர்த்தி கருத்திட்ட பிரிவிற்கான முகாமையாளர் A.M.அலி அக்பர் அவர்களும் மாவட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பிற்கு பொறுப்பான முகாமையாளர் K.பகீரதன் ஆகியோரும் கலந்த கொண்டிருந்தனர்.










Comments